விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் முக்கியமாக ப்ரைம் டைமில் வெளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பியின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ராஜா ராணி 2.
இந்த சீரியலில் தற்பொழுது சிவகாமியின் கடைசி மகன் ஆதி ஜெசி என்ற பெண்ணை காதலித்து வருகிறார் மேலும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அர்ச்சனா பார்த்துவிட பிறகு ஆதி அனைத்து உண்மைகளையும் அர்ச்சனாவிடம் கூறுகிறார் இந்நிலையில் ஜெஸ்ஸியை மாட்டி விட வேண்டும் என பிளான் போட்டு தன்னுடைய வளைகாப்புக்கு வர வைக்கிறார்.
மேலும் மேக் அப் போட ஜெசியும் வருகிறார் ஆதி அர்ச்சனா இருவரும் ஏதோ ஒரு விஷயத்தை மறைப்பது சந்தியாவிற்கு தெரிந்து விடுகிறது ஆனால் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை இப்படி இருக்கையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெசி திடீரெனம் மயங்கி அனைவரும் முன்பும் மயங்கி விட சிவகாமியின் மாமியார் ஜெசி கர்ப்பமாக இருப்பதாக அனைவரிடமும் கூறுகிறார்.
எனவே ஆதி ஜெசி என இருவரும் பயத்தில் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் சிவகாமி திருமணமாகாமல் எப்படி கர்ப்பமாக இருக்கிறாய் என்று கேட்டு ஜெசியை வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார் அந்த நேரத்தை ஜெசி நான் கர்ப்பமானதற்கு உங்களுடைய மகன் தான் காரணம் என மற்ற உண்மையையும் சொல்லிவிடுகிறார். ஆதியும் நானும் காதலிக்கிறோம் என்பதில் தொடங்கி குழந்தை வரை என்ன நடந்தது என்பதை சொல்ல அனைவருக்கும் தெரிய வர சிவகாமி, சரவணன், சந்தியா, செந்தில் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் அர்ச்சனா அனைவரும் முன்பும் எப்படி சிவகாமி தலை குனிந்து விட்டார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இதற்கு மேல் இவர்களுடைய திருமணத்தை சிவகாமி ஏற்றுக் கொள்வாரா மேலும் சந்தியா அனைவரையும் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.