விஜய் டிவி ஒளபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2 இந்த சீரியலில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பரீட்சை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்கள்.
பிறகு பூஜை ரூமில் இருந்து சிவகாமி திருநீர் கொடுக்கிறார் பிறகு எக்ஸாம் நல்லா எழுதிட்டியா இந்த பேப்பர் திருந்தி வந்ததும் நீ போலீஸ் ஆயிடுவியா எனக் கேட்க இல்லை இன்னும் ஒரு பரிச்சை இருக்கு பிறகு இன்டர்வியூம் இருக்கிறது எனக்கு கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள்.பிறகுஅனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது அர்ச்சனா ஆதியின் திருமணம் பற்றிய பேசுகிறார் இதன் காரணமாக சரவணன் நீயும் பார்வதி போல் வேறு யாரயாவது காதலிக்கிறாயா என்று கேட்கிறார் அதற்கு ஆதி அப்படியெல்லாம் ஏதேனும் கிடையாது என கூறுகிறார். பிறகு ஆதி வெளியில் போன் பேசிக்கொண்டிருக்க இதனை பார்த்த அர்ச்சனா வெளியில் சென்று ஆதியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சந்தியா வர இருவரும் மழுப்பிக்கிறார்கள்.
உள்ளே செல்கின்றன இந்த நேரத்தில் சரவணன் சந்தியாவை நெருங்கி வர உடனே கரண்ட் போய்விடுகிறது இருந்தாலும் பரவாயில்லை என நெருங்கி வரும் நேரத்தில் மயில் விளக்கு எடுத்துக் கொண்டு வேகமாக வருகிறாள். கரண்ட் கம்பம் சாஞ்சு போச்சு இனிமே காலையில தான் வருமா என கூறுகிறார். பிறகு அம்மா காத்தோட்டமா தூங்க உங்களை வெளியில் வர சொன்னாங்க என கூறுகிறார்.
மீண்டும் சரவணன் முத்தம் கொடுக்கப் போகும் நேரத்தில் மீண்டும் நீங்க இன்னும் வரலையா என கூப்பிடுகிறார். எனவே சரவணன் என்னுடைய பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கூட அதன் தர முடியலை என புலம்பி விடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.