விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்பொழுது எதிர்பாராத விதமாக பல பிரச்சினைகள் அரங்கேறி வருகிறது அதாவது இன்றைய எபிசோடுகளில் பெண்களை பரிசோதனை செய்வதாக சொல்லி ஒரு பெண்ணை ரூமுக்குள் அழைத்துச் சென்று தவறான முறையில் நடந்து கொண்ட அதனை வீடியோ எடுத்ததால் அந்த பெண் அழுது கொண்டே வெளியில் வந்து சந்தியாவிடம் புலம்புகிறார்.
இதனால் தட்டி கேட்க பிறகு உயர் அதிகாரி வந்து மன்னிப்பு கேட்டு அனைவரையும் பரிச்சை எழுத உள்ளே அனுப்புகிறார் பிறகு சந்தியா பரீட்சை எழுதிக் கொண்டிருக்க சரவணன் சாமி இடம் வேண்டிக் கொள்கிறார்.இந்த பக்கம் சிவகாமி வீட்டிற்கு அர்ச்சனாவின் குடும்பத்தினர் வந்து சீமந்தம் நடித்தது பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மண்டபத்தில் நடத்தலாம் என அவர்கள் கூற சிவகாமி அலைச்சல் எதுக்கு வீட்டிலேயே நடத்தலாம் என கூற அனைவரும் சரி என சொல்லி விடுகிறார்கள் ஒரு பக்கம் பரிட்சை முடித்துவிட்டு வெளியே வந்த சந்தியா சரவணன் இடம் எக்ஸாம் சூப்பரா எழுதி இருப்பதாக சொல்லி நடந்த பிரச்சனை குறித்து பேசுகிறார் அடுத்ததாக இருவரும் வீட்டிற்கு கிளம்பி வார இந்த பக்கம் அர்ச்சனா வளைய காப்பு மண்டபத்தில் நடத்தினால் கிராண்டாக இருக்கும் என சொல்ல அப்போ செலவு எல்லாம் உன் புருஷனோடது தான் சரியா என கூற அதையெல்லாம் பேசுவதை மறந்து விடுவார்கள் என கூறுகிறார்.
இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு நபர் ஒருவர் என் பொண்ணுக்கும் சீமந்தம் ரெண்டு பேரும் சேர்ந்து மண்டபத்தில் வைக்கலாம் என சொல்ல சிவகாமி நாங்க வீட்டிலேயே வைப்பதாக முடிவு எடுத்துவிட்டோம் என கூறுகிறார். அர்ச்சனா உங்க பொண்ணுக்கு பொண்ணு தான் பொறக்கும் வயிறு ரொம்ப பெருசா இருக்கு என சொல்ல உனக்கு என்ன குழந்தை பிறக்கும் என அந்த பெண் கேட்க எனக்கு கண்டிப்பாக ஆண் குழந்தை தான் பிறக்கும் என கூறுகிறார்.
எந்த குழந்தையாக இருந்தால் என்ன எதுவாக இருந்தாலும் அது இந்த குடும்பத்தோட வாரிசு என அர்ச்சனாவை திட்டுகிறார் சிவகாமி. பிறகு சந்தியா சரவணன் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். எக்ஸாம் நல்லபடியாக எழுதியிருப்பதாக சொல்ல அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இதோடு எபிசோட் முடிவடைகிறது.