தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இன்றைய எபிசோடில் அர்ச்சனா சந்தியாவை எக்ஸாம் எழுத விடாமல் தடுப்பதற்கு பல முயற்சிகளை செய்கிறார் இன்று முழுவதும் இதுதான் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதாவது காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சந்தியா படித்துக் கொண்டு இருக்கிறார் மேலும் எக்ஸாம் என்பதால் மிகவும் பரபரப்புடன் சந்தியா படித்து வரும் நிலையில் சிவகாமி மற்றும் அவருடைய கணவர் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சிவகாமி சந்தியாவால் போலீஸ் வேலை மற்றும் வீட்டில் இருப்பவர்களையும் பார்த்துக் கொள்ள முடியாது எனவே ஒரு கட்டத்தில் சந்தியா போலீஸ் வேலையை விட்டு தான் ஆக வேண்டும் எனக் கூறிய மகிழ்ச்சி அடைகிறார்.
பிறகு சிவகாமி மயிலிடம் டிபன் செய்து தருமாறு கூறுகிறார் பிறகு பேனா என அனைத்தையும் எடுத்துக் கொண்டியா என சிவகாமி மற்றும் அவருடைய கணவர் இருவரும் கேட்கிறார்கள் சந்தியாவும் எடுத்துக் கொண்டேன் எனக் கூறுகிறார். பிறகு சிவகாமி சந்தியாவுக்கு ஊட்டி விடுகிறார் இந்நிலையில் எக்ஸாமுக்கு நேரமாகிவிட்டதால் செந்திலை நீதான் பரீட்சை எழுதும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கூற உடனே அர்ச்சனா வயிறு வலிப்பது போல் சீன் போட்டு செந்திலை போகாமல் தடுக்கிறார்.
இதனை தொடர்ந்து ஆதியும் எனக்கு இன்னைக்கு அதிக வேலை இருக்கு என கூறுகிறார் இந்த நேரத்தில் உடனே சரவணன் வர அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் பிறகு சரவணன் சந்தியா இருவரும் பரீட்சை எழுதும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு ஏதாவது பிட்டு பேப்பர் வச்சு இருக்கிறார்களா என்பதை ரூமில் பெண்களை விட்டு செக் செய்கிறார்கள்.
அதுவும் ஒரு ஆண் இவ்வாறு செய்கிறார் மேலும் அவர் தவறாக தொடுவதாகவும், அதனை வீடியோ எடுப்பதாகவும் சந்தியாவிடம் ஒரு பெண் கூறுகிறார் இதனால் சந்தியா கோபமடைந்து தட்டி கேட்கிறார் இதனால் அடுத்தது என்ன பிரச்சனை வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.