விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2.இந்த சீரியலில் சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான டூரிஸ்ட்கள் இருந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது பல பிரச்சனைகளுக்குப் பிறகு எப்படியோ சந்தியா போலீஸ் ஆவதற்கு அவருடைய மாமியார் சிவகாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது இதற்கு மேல் போலீஸ் ஆகிவிடலாம் என நிம்மதியாக இருந்த நிலையில் திடீரென புதிதாக சிவகாமியின் மாமியார் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்து புதிய பிரச்சினை ஒன்றை எழுப்பி உள்ளார். அதாவது சந்தியா படித்து போலீஸ் ஆகிவிட்டால் அர்ச்சனாவிற்கு இந்த வீட்டில் மரியாதை இருக்காது எனவே படித்து கலெக்டராக வேண்டும் என விரும்புகிறார்.
இதனை நினைத்துக் கொண்டே அர்ச்சனா தூங்க கனவில் அர்ச்சனா கலெக்டராகி காரில் இருந்து வெளியே வரும் பொழுது சந்தியாவை அவருடைய காலை பிடித்து செருப்பை மாட்டி விட வேண்டும் என அதிகாரமாக கூறுவது போல கனவு காண்கிறார்.இதனை உளறும் பொழுது இவருடைய கணவர் அர்ச்சனாவை எழுந்து ஆசைப்படலாம் ஆனால் பேராசை படக்கூடாது என திட்டுகிறார்.
மேலும் உன்னால் நிம்மதியா கூட தூங்க முடியவில்லை எனை திட்டி விட்டு தூங்குகிறார் பிறகு திடீரென சிவகாமியின் மாமியார் ஊரிலிருந்து வருகிறார் சந்தியா அர்ச்சனா இருவரும் பயப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் வீட்டிற்க்கு வந்த சிவகாமி மாமியாரிடம் அர்ச்சனா சந்தியா போலீஸ் ஆவதை பற்றி கூற புதிய பிரச்சனை எழுகிறது.
சந்தியா போலீஸ் ஆன பிறகு சரவணன் நிலைமை என்ன என யோசித்து சிவகாமியின் மாமியார் சந்தியா போலீஸ் ஆவதற்கு முட்டுக்கொட்டை போடுகிறார். என் பேரன் வாழ்க்கை இப்படி நாசமா போயிடுச்சு என கூறிக் கொண்டிருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் சந்தியா இதனை சமாளித்து அவரிடமும் நல்ல பெயரை வாங்கி போலீஸ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது சிவகாமியின் மாமியார் சந்தியாவிற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்.