தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்ற நிலையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் ராஜா ராணி 2.
இன்றைய எபிசோடில் ரூமில் சந்தியா, சரவணன்,சிவகாமி எடுக்கப் போக முடிவு என்ன என்பது பற்றி ஒளிபரப்பாக இருக்கிறது அதாவது அத்தை பேசியதெல்லாம் பார்த்தால் அவங்களுக்கு நான் போலீஸ் ஆவதில் சுத்தமாக விருப்பமில்லை என்பது தெரிய வருகிறது எனவே வேண்டாம் என்று நான் சொல்லப் போகிறார்கள் என நினைப்பதாக சத்யா கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து சரவணன் அம்மா பேசியதெல்லாம் நம்ம மேல இருக்கிற அக்கறையில் தான் என்னுடைய சந்தோஷம்தான் அவர்களுடைய சந்தோஷம் கண்டிப்பாக நல்ல முடிவை தான் சொல்லுவாங்க என கூறுகிறார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு புறம் செந்தில் அர்ச்சனாவும் அம்மா சொல்லப்போகும் முடிவு குறித்து பேசிக் கொண்டிருக்க அர்ச்சனா கண்டிப்பா அத்தை வேண்டாம் என்று தான் சொல்லுவாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கல என கூறுகிறார்.
பிறகு சிவகாமியின் கணவர் ரவி ரூமில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது சந்தியா இந்த குடும்பத்துக்காக எவ்வளவோ செய்து இருக்கிறாள் உன்ன கெட்ட பயிரிலிருந்து காப்பாற்றி இருக்கா, நம்ம பொண்ணு பார்வதி உயிர காப்பாற்றி இருக்கா, இப்படியா அவ நம்ம குடும்பத்துக்கு நிறைய நல்ல விஷயங்களை பண்ணி இருக்கா, இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததால அவ லட்சியத்தை மறந்துவிட என சொல்றது எந்த விதத்தில் நியாயம் பிரச்சனை எங்க யாரிடமும் இல்ல உனக்குள்ள இருக்கிற கர்வம் தான் என ரவி கூறுகிறார்.
இதெல்லாம் பேசிட்டிங்களா என்னுடைய பதிலை நாளைக்கு சொல்றேன் என கூறுகிறார். பிறகு மறுநாள் காலையில் சிவகாமி பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்க எல்லோரும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக எழுத வந்து சிவகாமியின் முடிவுக்காக நிற்கின்றனர் பிறகு சிவகாமி பூஜை அறையில் இருந்து ஹார்ட் டிக்கெட் எடுத்து வந்து சந்தியா போலீஸ் ஆவதில் எனக்கு எந்த தடையும் இல்லை அதனால் தான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அப்படியே நான் இருக்கிறது.
அதற்கான பதிலை சந்தியா தேடி ஓட வேண்டும் என சொல்லி ஹால் டிக்கெட் கொடுக்கிறேன் என கூறுகிறார் ஹால் டிக்கெட் பார்த்தவுடன் சந்தியாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி மேலும் சிவகாமியின் காலில் விழுந்த ஆசிர்வாதம் வாங்குகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.