விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
சாமியார் சந்தியா எதிர்த்து வந்ததால் தீச்சட்டி ஏந்தி ஊர் முழுவதும் சுத்தி வரும் நேரத்தில் ரவுடிகள் சந்தியாவை தலையில் அடித்து விட்டு பார்வதி மற்றும் கண்ணம்மாவை கடத்தி சென்று விட்டார்கள். மேலும் பார்வதியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்றுவிட்டதாக பாக்ஸில் பார்வதியை பற்றிய பொருட்களை வைத்து வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
இதனைப் பார்த்த குடும்பம் பார்வதி இறந்து விட்டதாக கூறி கதறி அழுகிறார்கள். பிறகு சந்தியா வீட்டிற்கு வர சிவகாமி உன்னால்தான் இவ்வளவும் எனக் கூறி பலார் என அறைந்து விடுகிறார் அதன் பிறகு கண்டிப்பாக நான் கண்ணம்மாவையும் பார்வதியும் கண்டுபிடிப்பேன் என கூறிவிட்டு இந்த வீட்டில் இருந்து சரவணன் உடன் வெளியேறுகிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் சரவணன் சந்தியாவின் உதவியுடன் அந்த ரவுடி இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள் அப்பொழுது கண்ணம்மா கண்ணாடி தூண்டால் தனது கட்டை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் இருந்தாலும் ரவுடிகள் கண்ணம்மாவை மடக்க கத்தியால் குத்த வருகிறார்கள் இந்த நேரத்தில் பாரதி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து அந்த இடத்தை கண்டுபிடித்து ரவுடிகளை அடித்து விட்டு கண்ணம்மாவை காப்பாற்றி விடுகிறார்கள்.
கண்ணமாவிடம் பார்வதி பற்றி கேட்க பார்வதியை பெட்ரோல் ஊற்றிக் கொண்டு விட்டதாக கூறுகிறார். பிறகு அர்ச்சனா இனிமே சிவகாமியை ஜெயிலில் போட போறாங்க என கூறி அழுவ மணமடைந்த சிவகாமி குருவுக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு தூக்கு மாட்டிக் கொள்ளப் போகிறார்.
அனைவரும் இணைந்து சாமியே காப்பாத்தி விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பாரதி, கண்ணம்மா மற்றும் சரவணன், சந்தியா என அனைவரும் பூமி பூஜை நடத்தும் இடத்திற்கு செல்கிறார்கள். இங்கு ஸ்கிரீனில் பற்றிய தகவல்கள் ஓடிக்கொண்டிருக்க திடீரென்று சாமியார் மிகவும் நல்லதனமாக பேசிய வீடியோ ஒளிபரப்பாகிறது இதனை ஊர் பொதுமக்கள் அனைவரும் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைகிறார்கள். சந்தியா மேடையில் ஏறி இவர் போலி சாமியார் என்பதை எப்படியாவது ஒற்றுக் கொள்ளுங்கள் என கூறுகிறார் இத்தோடு இன்றைய எபிசோட் முடிகிறது.