விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள். தற்பொழுது சந்தியாவை தலையில் அடித்து விட்டு பார்வதி மற்றும் கண்ணம்மாவை கடத்திச் சென்ற ரவுடி கும்பல் பார்வதியை பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் அவருடைய சாம்பலை பாக்ஸில் போட்டு சிவகாமியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இரண்டாவது பாதியில் மக்களிடம் கையெழுத்து வாங்கிய சாமியார் கோர்ட்டில் மறுமுறையீடு செய்கிறார். சந்தியாவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று இருந்த சரவணன் பார்வதி இறந்ததைப் பற்றி கூற சந்தியா கதறி அழுகிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பார்வதியை பறிகொடுத்து விட்டோம் என கதறிக் கொண்டிருக்கும் பொழுது சந்தியா காரில் இருந்து இறங்குகிறார்.
உன்னால்தான் என் பொண்ணை பறி கொடுத்திருக்கிறேன் எனக்கூறி சிவகாமி சந்தியாவை பளார் என அறிய சந்தியா இதற்கெல்லாம் காரணம் அந்த சாமியார் தான் என கூறுகிறார். மீண்டும் இவ்வாறு சொன்னதால் இன்னுமா உன்னுடைய ஆணவத்தை விடல என சிவகாமி மிகவும் கோபமடைகிறார்.
நீங்க என்ன சொன்னாலும் நான் சொல்வது தான் உண்மை இதுவரையிலும் என்னால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் வந்ததில்லை அப்படி இப்படி என வந்தாலும் கடைசியில் என்னால் எனது குடும்பத்திற்கு நல்லது தான் நடக்கும் எனக் கூறுகிறார். பிறகு கடைசியில் கண்ணம்மாவை நான் தேடி கண்டுபிடிப்பேன் என்றும் பார்வதி உயிருடன் தான் இருக்கிறாள் என எனது உள் மனது சொல்கிறது எனவும் கூறுகிறார்.
பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் அதுவரையிலும் இந்த வீட்டிற்குள் வரமாட்டேன் என சபதம் போடுகிறார் பிறகு சரவணன் மூத்த மகனா என்னால் இந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட கலக்கத்தை சரி செய்வேன் என அவரும் கூறிவிட்டு இருவரும் வீட்டை விட்டு செல்கிறார்கள்.
பிறகு பார்வதி அங்கிருக்கும் குழந்தைகளிடம் நான் கண்ணம்மாவை தேடி கண்டுபிடிக்கிறேன் என் ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இவ்வாறு ஊர் பொதுமக்கள் சாமியாருக்கு சப்போட்டாக இருக்க மேலும் சிவகாமியின் குடும்பத்தை சும்மா விடக்கூடாது எனவும் கூறுகிறார்கள்.