தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர்ந்து இந்த சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது சரவணன் மற்றும் சில போலீசர்கள் தீவிரவாதியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.
எனவே இவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக போலீசார்கள் முயற்சி செய்து வரும் நிலையில் இறுதியில் கொரில்லா போர் முறையை துவங்க முடிவு செய்கின்றனர் கொரில்லா போர் முறை என்பது மழையில் மறைந்து தொடர்ந்து ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை அழிப்பது தான்.
இப்படி முடிவு செய்த நிலையில் ஆனால் இதில் யார் வேணாலும் இருப்பவர்கள் ஏன் போலீஸார்கள் மற்றும் சரவணன் ஆகியவர்களும் இறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என தயங்குகின்றனர் ஒரு கட்டத்தில் அனைவரும் சரவணன் மற்றும் போலீசார்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அனைவரும் காட்டிற்குள் செல்கின்றனர்.
அந்த நேரத்தில் சந்தியா நானும் வரேன் எனக் கூற அதற்கு மேல் அதிகாரிகள் வேண்டாம் என மறுத்து விட்டு செல்கின்றனர் சந்தியா அதனை ஏற்றுக் கொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் தனியாக தன்னுடைய கணவரை தேடி செல்கிறார். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது சந்தியா தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்கிறார்.
சந்தியாவை சரவணன் மற்றும் மற்ற போலீசார்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கட்டி போடுகின்றனர் சந்தியாவை மிரட்ட அந்த நேரத்தில் சரவணன் கத்துகிறார் உடனே சரவணனை அடிக்கின்றனர் பிறகு ஊரில் இருப்பவர்கள் சாமிக்கு பூஜை செய்ய அந்த சக்தி சரவணனுக்கு வருகிறது.
உடனே சரவணன் ஆக்ரோஷமாக கத்தியை எடுத்துக் கொண்டு அனைத்து தீவிரவாதிகளையும் விரட்டுகிறார். இவ்வாறு சந்தியா லாஜிக்கே இல்லாமல் தனியாக நின்று கொரில்லா போர் முறையை நடத்த முடிவெடுத்த நிலையில் ரசிகர்கள் கழுவி ஊற்றி வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தீவிரவாதிகளிடம் வசமாக மாட்டிக் கொண்ட நிலையில் சம்பந்தமே இல்லாமல் ராஜா ராணி சீரியலின் கதை இருப்பதாக கூறி வருகிறார்கள்.