விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது ஏராளமான திருப்பங்கள் உடன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது அதாவது தீவிரவாதிகள் மூன்று இடங்களில் வெடிகுண்டை வைத்துள்ள நிலையில் தன்னுடைய கணவரின் உதவியுடன் ஜோதிடம் போட்டு வாங்கி அந்த குண்டுகளை வெடிப்பதற்கு முன்பே செயலிழக்க செய்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பிறகு ஜோதியை மீட்க வந்த தீவிரவாதிகள் சரவணனையும் தூக்கி சென்று விட்டனர் எனவே சரவணன் தற்பொழுது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளார் இதனை அடுத்து போலீஸ் உயர் அதிகாரி உள்ளிட்ட பலரையும் காப்பாற்றுவதற்காக சந்தியா துணிவுடன் கிளம்பி உள்ளார்.
இவ்வாறு தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு போலிஸ் அதிகாரிகள் அனைவரும் கொரிலா முறையை கையாள வேண்டும் என முடிவெடுத்து உள்ளனர். கொரிலா முறை என்பது மலைகளில் மறைந்திருந்து எந்த வரைமுறையும் இன்றி அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு போராகும்.
எனவே ஏராளமான படங்களில் இந்த காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சீரியல்களிலும் கொரில்லா தாக்குதலை நிகழ்த்த போலீசர்கள் முடிவெடுத்து இருக்கின்றனர் இவ்வாறு இந்த போர் யுத்தியை செயல்படுத்தும் போது தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் அவருடன் இருக்கும் மற்றவர்களும் உயிரிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என போலீசார் தயங்குகின்றனர்.
மேலும் இந்த ஒரு ஆபரேஷனில் சத்யாவும் உடன் வருவதாக சொல்லும் நிலையில் அதனை போலீசார்கள் ஏற்க மறுக்கின்றனர் எனவே அந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்கின்றனர் சந்தியா தன்னுடைய கணவர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனி ஒரு ஆளாக கையில் துப்பாக்கியவுடன் கிளம்பி இருக்கிறார். இவ்வாறு இதனை பார்த்துவிட்டு எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.