தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் தற்பொழுது ராஜா ராணி 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் இன்றைய எபிசோடில் சிவகாமி வீட்டை துடைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அப்பொழுது சந்தியா போனில் பேசிக்கொண்டே மார்ச்சரியிலிருந்து வீட்டிற்குள் வருவதாக கூறுகிறார்.
இதனை கேட்ட உடன் சிவகாமி சந்தியாவை திட்டுகிறார் வெளியில் இருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு வீட்டை திரும்பவும் துடைக்க வேண்டும் என பனிஷ்மென்ட் கொடுக்க உடனே சந்தியா நான் பார்த்துக்கிறேன் அத்தை என கூறுகிறார். எனவே சந்தியாவும் குளித்துவிட்டு வீட்டினை துடைத்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் ஸ்டேஷனில் இருந்து பணியாற்றும் போலிஸ் பெண் அதிகாரிகள் வீட்டிற்கு வர சந்தியா வேலை முடித்துவிட்டு வெளியே வரேன் எனக் கூற அவர்கள் காத்திருக்கின்றனர்.
அதன்பிறகு ரவுடிகளை பிடிக்க 24 மணி நேரமே எஸ்பி டைம் கொடுத்துள்ளதால் என்ன செய்வது என சந்தியா கலந்துரையாட சரவணன் விஷத்தைக் கேட்டு தெரிந்து கொள்கிறார். பிறகு சிவகாமியும் அர்ச்சனாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்ன ஆச்சு என பாருங்க என்ன சிவகாமியிடம் கொடுக்க குழந்தைக்கு அம்மை போட்டு இருப்பதாக சொல்ல அர்ச்சனா அதிர்ச்சடைகிறார்
எனவே மனம் கேட்காத அர்ச்சனா குழந்தையை பார்ப்பதற்காக பக்கத்து வீட்டிற்கு செல்ல அப்பொழுது சிவகாமி தடுத்து நிறுத்தி அங்கு போகக்கூடாது என ரூமுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் செந்தில் அர்ச்சனாவிடம் ஆசையாக நெருங்கி வர நெற்றியில் பட்டையுடன் முகத்தை காட்டி பயமுறுத்துகிறார் அர்ச்சனா.
மேலும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு அம்மை போட்டு இருப்பதால் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். இவர்களை அடுத்து மறுபுறம் சரவணன் சந்தியாவிடம் மிகவும் ஆசையாக பேசி ரொமான்ஸ் செய்கிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.