விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி, ஜெஸ்ஸி என இருவரும் சிவகாமியை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆனால் சிவகாமி உச்சகட்ட கோபத்தில் இருந்து வரும் நிலையில் இந்த வீட்டில் இருந்து யார் வேணும்னாலும் அந்த விழாவிற்கு போயிட்டு வாங்க என்னை தயவு செய்து கூப்பிடாதீர்கள் என கூறுகிறார் மறுநாள் சென்னையில் பட்டமளிப்பு விழா தொடங்கியதும் கௌரி மேடம் இதுவரை என்னுடைய கேரியரில் இந்த மாதிரி ஒரு திறமையான பேட்சை பார்த்ததில்லை என பாராட்டை பேசுகிறார்.
இது முடிந்தவுடன் அனைவருக்கும் பட்டமளிக்கப்படுகிறது. மேலும் மினிஸ்டர் ஓவரால் சாம்பியன்ஷிப் என்ற பட்டத்தை சந்தியாவுக்கு அளித்து பதக்கத்தை கொடுக்கிறார். இவரை அடுத்து சரவணனுக்கு குடிமகன் என்ற விருதையும் வழங்கி பாராட்டுகிறார் இந்த நேரத்தில் சேத்தன், சந்தியா, அப்துல் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் தினமும் பார்க்க முடியாது என்றும் ஆனால் யார் யாரையும் மறந்து விடக்கூடாது எனவும் போனில் காண்டக்கடில் இருக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கின்றனர்.
அந்த நேரத்தில் கவரி மேடம் நான் சிறந்த பயிற்சியாளராக வந்தபோது எனக்கு ஒருத்தவங்க கொடுத்தது இந்த செயின் உன்னை விட திறமைசாலியான ஒரு தர நீ பார்க்கும் பொழுது அவங்களுக்கு இதை கொடுங்க மீண்டும் என சொன்னாங்க 14 வருடமாக நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை ஆனால் இப்பொழுது சந்தியாவை நான் பார்க்கிறேன் எனக் கூறி பாராட்ட அந்த செயினை கொடுக்கிறார்.
இதனை முடித்துவிட்டு சரவணன் சந்தியா இருவரும் தங்களுடைய வீட்டிற்கு வர அங்கு இவர்களை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் நடக்கிறது சிவகாமி அனைத்தையும் பார்த்துவிட்டு இதையெல்லாம் இப்பொழுது தேவையா என கத்துகிறார். இந்த நேரத்தில் சரவணன் சந்தியா இருவரும் வர அதற்கு சிவகாமி இந்த வீட்டிற்குள் என்னுடைய மருமகளாகத்தான் வரவேண்டும் என சந்தியாவை கூறுகிறார்.