5 லட்ச ரூபாய் திருடிய ஆதியை கையும் களவுமாக பிடித்த சந்தியா.! ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோட்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ராஜா ராணி 2வில் தற்பொழுது சந்தியா ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அதன் டிரெயினிங்கிற்காக வெளியூர் செல்ல வேண்டும் என்ற நிலைமை வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இதனை தன்னுடைய மாமியார் சிவகாமியிடம் கூற சிவகாமி அப்படி ட்ரெயினிங் போக வேண்டும் என்றால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற்று 5 லட்ச ரூபாய் வீட்டில் வைத்திருந்த நிலையில் அந்த பணம் திருடு போனது எனவே அந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை கண்டுபிடித்துக் கொடுத்தால் நீ ட்ரைனிங் போகலாம் என கூறுகிறார். எனவே சந்தியாவும் எப்படியாவது திருடனை கண்டுபிடிக்க வேண்டும் என தன்னுடைய ஐபிஎஸ் மூலையால் யோசிக்கிறார்.

ஆதி தான் ஜெசிக்காக அந்த பணத்தை திருடி நெக்லஸ் வாங்கிய கொடுத்தார் என்பது சந்தியாவிற்கு தெரிய வருகிறது இதனை ஆதியிடம் கேட்க உடனே ஆதி சந்தியாவின் காலில் விழுந்து இந்த உண்மையை அம்மாவிடம் கூறிவிட்டால் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என கெஞ்சுகிறார். தற்பொழுது சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார்.

ஏனென்றால் உண்மையை சொல்லவில்லை என்றால் சந்தியா ட்ரைனிங் போக முடியாது அப்படி உண்மையை சொன்னால் ஆதி ஜெசியின் திருமணம் நடக்காது இவ்வாறு இந்த இக்கட்டான சூழ்நிலையில் சந்தியா இருந்து வருகிறார்.இவ்வாறு இந்த இரண்டினையும் சமாளிக்கும்படி ஒரு திட்டத்தை போட உள்ளார்.

மேலும் ஆதி திருடியதை சிவகாமியிடம் மாட்டி விடமாட்டார். இவ்வாறு சந்தியா இதற்காக மாஸ்டர் பிளான் போட்டு தன்னுடைய ஐபிஎஸ் கணவையும் நிறைவேற்றிக் கொண்டு ஆதி ஜெசியின் திருமணத்தையும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.