அர்ச்சனா மற்றும் விக்கியின் சதித்திட்டத்தை உடைத்த சந்தியா.! இன்றைய எபிசோட்.

raja rani 2 1
raja rani 2 1

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் எப்படியாவது டிஆர்பி முன்னணியை வைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப்பேற்று வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல டுவிஸ்ட்கள் நிறைந்த காட்சிகள் இருந்துவரும் நிலையில் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து எதிர்பாராத பல திருப்பங்கள் இருந்து வரும் சீரியல் தான் ராஜா ராணி 2.

இந்த சீரியலில் தொடர்ந்து பார்வதியின் திருமணத்தை மையமாக வைத்து எபிசோடுகள் வெளியாகி வருகிறது.  பார்வதி கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது காதலித்த விக்கி தற்பொழுது தன்னுடன் திருமணத்திற்கு முன்பு ஒரு நாளாவது இருக்க வேண்டும் என சொல்லி மிரட்டுகிறான் எனவே தூக்கு போட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த பார்வதி.

பிறகு சந்தியா தந்த ஊக்கத்தினால் தைரியமாக விக்கிக்கு போன் செய்து உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று சொல்கிறான் பிறகு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தாலி கட்டும் நேரத்தில் கரெக்டாக விக்கி வில்லன் போல் என்றி கொடுத்து காதலித்துக் கொண்டிருக்கும் பொழுதே பார்வதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டுகிறான்.

எனவே அனைவரும் பார்வதி பற்றி தப்பாக பார்த்து வந்த நிலையில் திடீரென்று சந்தியா பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என வீரவசனங்கள் பலவற்றை பேசுகிறாள் அந்த எபிசோடு தான் தற்பொழுது வெளியாகிவுள்ளது. பிறகு அர்ச்சனாவின் கனவும் சுக்குநூறாக உடைந்துள்ளது.