தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இந்த சீரியலில் பெண்களை மையப்படுத்தி காட்டுவதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. அதைத்தொடர்ந்து டிஆர் பி யில் டாப் சீரியலாக இடத்தை பெற்றுள்ளன. மேலும் இதை தொடர்ந்து விஜய் டெலிவிஷனில் ராஜா ராணி சீசன்2 குடும்பத்தினருக்கு பல விருதுகள் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சரவணனிடம் வேலை பார்த்துக்கொண்டே பல திட்டங்களைப் போட்டு செல்வம் வருகிறார். தீவிரவாதியாக இருந்து அங்கிருக்கும் கோவிலில் குண்டு வைத்து ஊர் மக்களை தாக்குவதற்கு பல திட்டங்களைத் தீட்டி வருகிறார் செல்வம், இதையெல்லாம் பார்வதி மறைந்திருந்து கேட்டு விடுகிறார். இதனைப் பார்த்த செல்வம் பார்வதி மூலமாகவே கோவிலில் குண்டு வைப்பதற்கு பிளான் செய்கிறார். மேலும் இதைத்தொடர்ந்து செல்வத்துடைய பிளான் நடக்குமா ?என்று எதிர்பார்த்து வந்தார்கள்.
இந்நிலையில் சந்தியாவிற்கு செல்வத்தின் மேல் ஒரு டவுட் ஏற்பட்டது செல்வம் தான் அந்த தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்று சந்தியாவுக்கு ஒரு சிறிய தூண்டுதலை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு போலீஸ் உதவியுடன் செல்வம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போதே பார்வதி கிடைத்து விட்டதாகவும் மயக்கத்தில் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட செல்வம், பார்வதி தன்னை பற்றி உளறி விடுவாள் என்று செல்வம் அதைத் தடுக்க திட்டம் தீட்டுகிறான்.
அதன் பிறகு செல்வம் டாக்டரை போல் வேஷமிட்டு பார்வதியை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் மயக்கத்தில் படுத்திருக்கும் நபர் பார்வதி அல்ல போலீஸ், போலி டாக்டராக வேஷம் போட்ட செல்வம் கையும் களவுமாக மாட்டி விட்டார். பிறகு செல்வத்தை சுற்றி சந்தியா போலீசாரும் செல்வத்தை மடக்குவதற்கு சுற்றிலும் நிற்க்கிறார்கள். ஆனால் தீவிரவாதியான செல்வம் கையிலிருந்த தீயணைப்பானை எல்லோரும் முகத்தில் அடித்து விட்டு தப்பித்து விடுகிறான் செல்வத்தை பிடிப்பதற்கு சந்தியா போலீஸுடன் சேர்ந்து போராடுகிறார்.
மேலும் இவ்வளவு பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும் இதைப் பற்றிப் பேசாமல் இந்த விறுவிறுப்பான நேரத்தில் கூட சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து செல்வம் சந்தியாவிடம் சிக்கி கொள்வாரா? இல்லை தப்பித்து விடுவாரா? என்று அடுத்த எபிசோடில் எதிர்பார்க்கப்படுகிறது