விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஃடாப் சீரியலாக வளர்ந்து வருகிறது.
இதை தொடர்ந்து விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் பல போராட்டங்களுக்கு பிறகு பாஸ்கருக்கும் பார்வதிக்கும் திருமணமாகி வந்தது அதனையடுத்து இன்னொரு பிரச்சினை ஆரம்பம் ஆகிவிட்டது. அதாவது வீட்டு வேலை செய்து வரும் மயிலுடைய உறவினராக சொல்லிக்கொண்டு சரவணன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவன் தீவிரவாதியாக செயல்பட்டு திட்டம் போட்டு வருகிறார். அதனை பார்வதி தெரிந்து கொள்கிறார். அதனால் அந்த தீவிரவாதி பார்வதியை ஒரு அறையில் அடைத்து அவள் மூலமே குண்டு வைக்க திட்டமிடுகிறார். பார்வதி தொலைந்து போய் இரண்டு நாள் ஆகிவிட்டது. தற்போது சந்தியா சரவணன் ஆகிய இருவரும் பார்வதியை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து வருகிறார்கள். அப்போது சந்தியா போலீசிடம் ஒரு பென்ட்ரைவ் தருகிறார்.
எனவே அந்தப் பென்ட்ரைவில் ஒரு கோவிலின் புகைப்படமும் பார்வதியின் புகைப்படமும் ஒன்றாக காட்டப்படுகிறது. இதில் போலீஸ் அதிகாரிகளுக்கு கோவிலில் குண்டு வைப்பதாக தகவல் முன்னரே தெரியவந்தது. இதனால் போலீஸ் கோவிலில் குண்டு வெடிப்பதற்கும் பார்வதிக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று கூறுகிறார். எனவே பார்வதி மூலமாக தான் குண்டு வெடிக்க செய்ய போகிறார்கள் என்று பார்வதியை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசா இருக்கும் வரை சீரியல் நன்றாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஆலியா மானசா சில காரணத்தால் வெளியேறியதால் சந்தியா கதாபாத்திரத்தில் ரியா நடிப்பது சுத்தமாக செட்டாகவில்லை. ஐபிஎஸ் ஆகும் கனவு இனி நடக்கப் போவதில்லை. என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்