மனித வெடிகுண்டாக கோவிலுக்கு வரும் பார்வதி.! பதறியடித்து ஓடும் குடும்பதினர்கள்..

rajarani-serial
rajarani-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. இது தொடர்ந்து பி ஆர் பி யில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வருகிறது. இதன் பிறகு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ரீச் கிடைத்து வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ராஜாராணி சீசன் 2 சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பாஸ்கரை நினைத்தபடியே திருமணம் செய்த பார்வதி மறு வீட்டிற்கு வரும்பொழுது விக்கியின் அப்பா ஆள் வைத்து கடத்தி விட்டார். இதை சிறிது நேரம் கழித்து பார்த்த வீட்டில் உள்ள அனைவரும் பதறிப்போய் தேடி பார்த்தார்கள் ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து சந்தியாவிற்கு பார்வதி பற்றிய ஒரு சின்ன குழு கிடைத்தது. அதைப் பார்த்தால் விக்கியின் அப்பா தான் கடத்தி இருக்க வேண்டுமென்று சந்தியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சந்தியா விக்கியின் அப்பாவிடம் போய் கேட்கிறார். பார்வதியை அனுப்பிவைக்கா விட்டால் பிரச்சினை ஏற்படும் என்ற மாதிரி பேசி வருகிறார் சந்தியா.

எனவே, விக்கியின் அப்பா கடத்தவில்லை என்பதாகவும் கூறுகிறார். செல்வம் தான் கடத்தி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் சந்தியாவிற்கு விக்கியின் அப்பா மேல் தான் டவுட்டாக உள்ளது. அப்போது பார்வதி குடும்பத்துடன் அனைவரும் கோவிலுக்கு செல்வதாக இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பார்வதியின் மேல் மனித வெடிகுண்டு வைப்பதற்காக முடிவு செய்கிறார்.

இதைத்தொடர்ந்து பார்வதியின் மேல் மனித வெடிகுண்டு வைப்பதாக இருக்கிறார். விக்கியின் அப்பா இதற்கு பார்வதி ஒத்துக் கொள்ளாவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழித்திடுவேன் என்று மிரட்டி வருவதால் அதற்கு பார்வதி உடலில் மனித வெடிகுண்டு வைப்பதற்கு சம்மதித்து விடுகிறார்.

மேலும் பார்வதி மனித வெடிகுண்டு உடன் கோவிலுக்கு செல்லப்போகிறார். அங்கு என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்