ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அதுவும் முக்கியமாக தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைகாட்சி விஜய் டிவி.
அந்த வகையில் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி ஒளிபரப்பான சில காலங்களிலேயே டிஆர்பி-யில் எளிதில் இடம் பெற்ற சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் தனது மனைவியின் கனவை தன் கனவாக நினைத்து அப்படி கணவன் செயல்படுகிறான் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
கதாநாயகியாக ஆலியா மனசா நடித்து வந்த நிலையில் தற்போது புதிய நடிகை அறிமுகமாகியுள்ளார். மேலும் கதாநாயகனாக சித்து நடித்து வருகிறார். இவ்வாறு சந்தியாவை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் குறை சொல்லி வந்த நிலையில் தற்போது தான் அனைவரும் பெருமையாக நினைத்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது தான் பார்வதியின் திருமணம் பல பிரச்சனைகளை தாண்டி நிகழ்ந்தது இப்படிப்பட்ட நிலையில் விக்கியின் அப்பா பார்வதியை கடத்தி கொண்டு சந்தியா மற்றும் சரவணன் குடும்பத்தினரை மிரட்டி வருகிறார்கள். சந்தியா மற்றும் சரவணன் இருவரும் இணைந்து பார்வதியைத் தேடி வரும் நிலையில் தற்பொழுது போலீஸ்காரர்கள் சந்தியாவிற்கு கால் செய்து மார்ச்சரிக்கு வருமாறு அழைக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் கடைக்கு சென்ற சந்தியா பார்வதியின் வளையல்கள் சிதறிக் கிடப்பதை பார்க்கிறாள் மேலும் பாஸ்கர் நான் தான் பார்வதிக்கு இதனை புதிதாக வாங்கி கொடுத்தேன் என்று கூறிய நிலையில் தற்பொழுது பார்வதியை விரைவில் கண்டுபிடித்து உள்ளனர்.