அர்ச்சனாவின் வாழ்க்கையை நாசம் செய்யத் துணிந்த விக்கியின் அப்பா.! இன்றைய எபிசோட்..

archana
archana

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி சீசன் 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஒரு பெண் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி காட்டுவதால் அனைத்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தது. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் ரசித்து வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து சந்தியா ஒரு தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார். அப்போது பார்வதிக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டது. பெண்ணாக இருந்தால் கோழையாக இருக்கக் கூடாது என்று சந்தியா பார்வதிக்கு ஏற்பட்ட பிரச்சனை அனைத்தையும் தனியாக நின்று போராடினார். அதற்கு சரவணனும் சப்போர்ட் செய்து வந்தார்.

இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விக்கியை ஜெயிலுக்கு அனுப்பினார்.இந்த செய்தியை கேட்ட விக்கியின் அப்பா ரொம்ப கோபமாக இருக்கிறார். இதெல்லாம் முடிந்த பிறகு பார்வதி தன் புகுந்த வீட்டில் பாஸ்கர் கூட சந்தோசமாக வாழ்கிறார்.இதைப் பார்த்த அனைத்து குடும்பமும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் அர்ச்சனாவுக்கு மட்டும் பொறாமையாக இருக்கிறது .

இதைத்தொடர்ந்து அனைத்து குடும்பமும் பார்வதியிடம் போன் பேசுகிறார்கள்.அப்போது பார்வதி நான் சமைக்கிறேன் என்று சொன்னதும் அனைத்து குடும்பமும் ஒருபக்கம் அதிர்ச்சியாகி இங்க ஒரு வேலையும் செய்யாமல் அங்க சமைக்கலாம் செய்கிறார். என்று ஒருவிதத்தில் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அர்ச்சனாவுக்கு நடக்கின்ற எதுவுமே பிடிக்கவில்லை.ஏதாவது வில்லத்தனம் செய்து குடும்பத்தை பிரிக்க வேண்டும்.என்பதே நோக்கமாக வைத்து வருகிறார்.அப்போது விக்கி வீட்டில் அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு வீட்டில் மிரட்டுகிறார். உங்க குடும்பத்தினல்தான் என் மகன் ஜெயிலில் இருக்கிறான் உங்க குடும்பத்தை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டுகிறார்.

அதோடு மிரட்டுவது மட்டுமல்லாமல் போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ததை வாபஸ் வாங்க வேண்டும் என்கிறார். இதைக்கேட்ட அர்ச்சுனா இனி என்ன என்ன செய்யப்போகிறார். என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.