விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படும் நாடகமான ராஜாராணி சீசன் 2 தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பல பிரச்சினைகளுக்கு பின்பு பார்வதி தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்.
எல்லா பிரச்சனையும் முடிந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று ரசிகர்கள் நினைத்து நிலையில் அது தற்போது முடியவில்லை என்று தற்போது வெளியான ராஜாராணி சீசன் 2வின் குறுகிய வீடியோ அதை தெளிவுபடுத்தியுள்ளது.
அது என்னவென்றால் பார்வதியை முதலிரவுக்கு அத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார் அப்போது அவரிடம் “உன்னை பார்த்து என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு நீங்கள் இருவரும் கணவன்-மனைவியாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழ்க்கையை நன்றாக நடத்த வேண்டும்” என்று கூறுகிறார்.
அதன்பிறகு முதலிரவு அறைக்கு சென்ற பார்வதி தன் கணவனிடம் அமைதியாக உட்காருகிறார் அவர் ஆசையுடன் பார்வதியைக் கொஞ்ச பார்வதி அவரின் கையை தன் மீது இருந்து எடுத்து விடுகிறார், அதற்கு பார்வதியின் கணவன் ஆசையாய் உன்னை கொஞ்ச வந்தால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு பார்வதி நாம் ஒன்றாக இருக்க காரணம் சந்தியா அண்ணிதான், அவர் என் வீட்டிற்கு முதலில் வந்த பொழுது நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை அவரை எனக்கு பிடிக்காது, ஆனால் அவர் இப்படிப்பட்ட நல்லவர் என்று எனக்கு தெரியாது இந்த நிலையில் என்னால் எதுவும் செய்ய இயலாது, இன்று ஒரு நாள் மட்டும் உறங்கி கொள்கிறேன் என்று கூறுகிறார் பாரதி.
அதற்கு அவரோ சரின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஒரே பெட்ல தனித்தனியா படுத்து தூங்குறாங்க, மேலும் ஒரு ட்விஸ்டா பார்வதி பிளாக்மெயில் செஞ்சவன் ஜெயில்ல இருக்கான் ஆனா அவரோட அப்பா அவனை எப்படியாச்சும் வெளியில எடுக்கணும்னு செம்ம கோவத்துல கத்துகிறார் இது ரசிகர்களிடையே மேலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.