ஒரு பிரச்சனை தற்போது தான் முடிந்தது அதற்குள் இன்னொரு பிரச்சினையா.? சரவணன் எடுத்த அதிரடி முடிவு..

raja-rani-today-1
raja-rani-today-1

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த சீரியலில் முதல் சீசன் அமோக வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து அறிமுகமான சில கால கட்டத்திலேயே டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

எதிர்பார்க்காத பல திருப்பங்கள் என மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் பல டுவிஸ்ட்கள் நிறைந்த இருந்து வருவதால் ரசிகர்களை மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த சீரியலில் தற்பொழுது சரவணன் எப்படியாவது தனது மனைவியை போலீசார் கைவிட வேண்டும் என ஆர்வத்துடன் இருந்து வருகிறான்.

சமீபத்தில் முடிந்த குண்டுவெடிப்பை தடுத்து நிறுத்திய சந்தியாவிற்கு போலீசார்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதற்காக வீடு தேடிவந்து அழைக்கின்றனர். ஆனால் சிவகாமி அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் எனது மகனின் வீட்டோடு மருமளாக இருந்தால் போதும் எனக் கூறி வருகிறார்.

சரவணனும் தனது மனைவியை போலீசாக வேண்டும் என்பதற்காக இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளலாம் என்று கூற இதனை சிவகாமி மறுப்பதால் சரவணன் சிவகாமி குறித்து பேச ஆரம்பிக்கிறார். சிவகாமி என் குடும்பத்திற்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறுகிறார்.

ஆனால் சந்தியா கண்டிப்பாக இந்த பாராட்டு விழாவிற்கு போக வேண்டும் என நினைக்கிறார். சரவணன் கண்டிப்பாக இந்த பாராட்டு விழாவிற்கு போக வேண்டும் என சிவகாமியிடம் கூறுகிறார். இவ்வாறு விரைவில் சிவகாமி மற்றும் சரவணனுக்கிடையே பிரச்சனை உருவாகியிருக்கிறது என்பது நன்றாகத் தெரிய வருகிறது.