விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது டிஆர்பி-யின் உச்சத்தில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மிகவும் பல சுவாரஸ்யங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக பார்வதியை கடத்தி வைத்துக்கொண்டு விக்கியின் அப்பா அதற்கு உதவி புரிந்த செல்வம் என அனைவரும் இணைந்து பெரிய ஒரு யுத்தத்தையே நடத்தி உள்ளார்கள்.
அதாவது பார்வதியை கடத்தி வைத்திருந்த நிலையில் சில வாரங்கள் கழித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இணைந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது சர்க்கரையை காணவில்லை என சந்தியா கூற பிறகு சரவணனிடம் எனக்கு சர்க்கரையை எங்கு இருக்கிறான் கண்டுபிடித்து தாங்க என்று கூறுகிறாள்.
சரவணனும் சர்க்கரையை கண்டுபிடித்த நிலையில் அந்த சட்டையில் இருந்த பாமை சந்தியா கண்டுபிடித்து விடுகிறாள். பிறகு அதனைப் பிடுங்கிக் கொண்ட சரவணன் யாரும் இல்லாத இடத்திற்க்கு ஓடும் பொழுது பாம் வெடித்து விடுகிறது. பிறவி சரவணனுக்கு ஏதோ ஆகிவிட்டது என அனைவரும் கதற உடனே சரவணன் அதிலிருந்து உயிருடன் பிடித்து வருகிறார்.
இவ்வாறு மகிழ்ச்சியடைந்த சந்தியா சரவணனை கட்டி பிடித்து அழும் நேரத்தில் போலீஸ் வந்து சந்தியாவிற்கு போலீஸ் தொப்பியை அணிந்து போலீஸ் வேலையில் இணையுமாறு கேட்கின்றனர். எனவே சரவணன் மிகவும் மகிழ்ச்சியடைய சரவணன் அம்மா சிவகாமி எங்களுக்கு இந்த வேலையெல்லாம் வேணாம் தேவையில்லாமல் உசுப்பேத்த வேண்டாம் அவள் நல்ல மருமகளாக எங்க வீட்டில் இருந்தாலே போதும் அதுதான் சந்தியாவும் விரும்புகிறாள் என கூறுகிறாள். இதுதான் இன்றைய எபிசோடில் நடக்க இருக்கிறது.