சிவகாமியிடம் கூண்டோடு சிக்கிய ஆதி, அர்ச்சனா, சந்தியா.! இன்றைய முழு எபிசோட்..

raja-rani-23
raja-rani-23

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. தற்போது சரவணன் தனது அம்மா சிவகாமிக்கு தெரியாமல் சந்தியாவை கோசிங் கிளாஸ் இருக்கா அனுப்பி வருகிறார்.

சிவகாமி சந்தியாவை போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்றும் அடக்க ஒடுக்கமாக வீட்டிலேயே நல்ல மருமகளாக,சரவணனுக்கு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இவ்வாறு இதனை சந்தியாவும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் சரவணன் சந்தியா கண்டிப்பாக போலீஸ் ஆகி தான் தீர வேண்டும் என்ற முடிவில் வீட்டில் யாருக்கும் தெரியாமல் கோச்சிங் க்ளாஸ்க்கு அனுப்பி வைக்கிறார். இது ஒருபுறமிருக்க மற்றொருவரும் சரவணனின் தம்பி ஆதி பணக்கார வீட்டுப் பெண்ணை ஏமாற்றி நானும் பணக்காரன் தான் என்று கூறி காதலித்து வருகிறான்.

மேலும் அந்தப் பெண்ணும் சந்தியா படித்துவரும் இன்ஸ்டியூட்டில் தான் படித்து வருகிறார்.  அதன்பிறகு இன்ஸ்டியூட்டில் அருகில் இருக்கும் பூசாரி ஒருவரிடம் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அர்ச்சனா மாத்திரை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்த சாமியாரை பற்றி தொலைக்காட்சியில் வரும் நிலையில் சிவகாமி வாங்க குடும்பத்தோடு அந்த சாமியாரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று கூறுகிறார். அர்ச்சனா அங்கு போனால் அந்த சாமியாரிடம் இருந்ததுதான் மாத்திரை வாங்கி சாப்பிடுவது தெரிந்துவிடுமோ என்று பயப்படுகிறார்.

அர்ச்சனாவை தொடர்ந்து ஆதி அந்த சாமிய இருக்கும் பக்கத்துல தான ஜெஸ்ஸி கோச்சிங் கிளாஸ் படிக்கிறா ஒருவேளை அவளுக்கு நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சினா என்ன பண்றது என்று யோசிக்கிறான்.  இதனைத் தொடர்ந்து மயில் அந்த கோச்சிங் கிளாசில் தானே சந்தியா அம்மா படிச்சுகிட்டு இருக்காங்க இது எல்லாருக்கும் தெரிந்து விடுமோ என்று பயப்படுகிறார்.  இவ்வாறு தற்பொழுது சிவகாமி அந்த கோவிலுக்கு சென்றால் அனைவரும் சிக்குவார்கள் என்பது தெரிகிறது இவ்வாறு அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.