முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி அறிமுகமான சில காலங்களிலேயே டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்து சீரியல் தான் ராஜா ராணி 2. ஒரு பெண் ஐபிஎஸ்-சாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிய வயதில் இருந்தே வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் திருமணத்திற்குப் பிறகு தனது கனவை மறந்து வாழ்ந்து வரும் மனைவியை எப்படியாவது அவருடைய கனவை நிறைவேற்றி ஐபிஎஸ் ஆக்கிவிட வேண்டும் என்று முடிவில் தனது குடும்பத்தை எதிர்த்து வருகிறார் கணவன். மேலும் மாமியார் ஐபிஎஸ் ஆக கூடாது வீட்டிலேயே குடும்ப பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியா தென்காசியில் பிரபலமடைந்து உள்ள நிலையில் போலீசார் தானாக வந்து போலீஸ் பதவியை தந்தனர். ஆனால் போலீஸ் பதவி எங்களுக்கு வேண்டாம் அவர் நல்ல மருமகளாக இருந்தாலே போதும் என்று சிவகாமி கூறிவிடுகிறார்.
மேலும் பாம் வெடிப்பை தடுத்து நிறுத்தியதால் போலீசார் தரப்பில் இருந்து சந்தியாவிற்கு பாராட்டு விழா நடக்க இருந்தது. ஆனால் அதனையும் தற்பொழுது நடக்கவிடாமல் சிவகாமி செய்துவிட்டார். இதன் காரணமாக சந்தியாவை அழைத்துக்கொண்டு குற்றாலம் போகும் என்று சரவணனிடம் கூறுகிறார்.
சரவணன் வேண்டாம் என்று கூறிய நிலையில் தற்பொழுது சந்தியாவை கோச்சிங் கிளாஸ் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக சிவகாமி தற்பொழுது மிகவும் கோபமடைய போகிறார். மேலும் சரவணன் சந்தியாவை தனியாக அழைத்துக் கொண்டு போய் என்னுடைய நினைப்பெல்லாம் இல்லை எப்படி ஐபிஎஸ்-சாக வேண்டும் என்பதில்தான் இருக்கிறது என்று கூறி வருகிறார். இவ்வாறு தற்பொழுது சிவகாமி பகைத்துக்கொண்டு சரவணன் சந்தியாவிற்கு சண்டை போடப் போகிறார் இதுதான் இனிவரும் எபிசோடுகளில் நடக்க இருக்கிறது.