விஜய் டிவியில் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் தனது மனைவியின் ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கணவன் இப்படி எல்லாம் முயற்சி செய்கிறான் என்றும் ஆனால் அந்தப் பெண்ணின் மாமியார் எதனையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எப்படி வழி நடத்துகிறார் என்பதையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது பார்வதியின் திருமணம் பல தடைகளுக்கு பிறகு நடந்தது. இதனை தொடர்ந்து பார்வதியை தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஊர் திருவிழாவின்போது பாம் வெடிப்பது போல் செய்தனர். ஆனால் அதனை சந்தியா கண்டுபிடித்துவிட்டார்.
பிறகு அந்தப் பாமை சரவணன் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் யாரும் இல்லாத இடத்திற்கு எடுத்துக்கொண்டு போய் தூக்கி போடுகிறார். எப்படியோ அதிர்ஷ்டவசமாக சரவணனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் உயிர் தப்பித்து விட்டான்.
இதன் காரணமாகத் தற்பொழுது சந்தியாவிற்கு பாராட்டு விழா வைக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.மேலும் ஊர் பொதுமக்கள் அனைவரும் தென்காசியில் ஒரு இடம் விடாமல் சந்தியாவிற்கு காட்டவ்ட் வைத்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியாவை கொள்ள வேண்டும் என்பதற்காக தற்பொழுது செல்வம் ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டான். எனவே போலீசார்கள் வீடுத் தேடி வந்த சந்தியாவின் குடும்பத்தினர்களை எச்சரித்துவிட்டு போயுள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இரவில் சந்தியாவை சந்தித்த செல்வம் தென்காசியில் அடுத்த கொடூரமான கொலை நடக்க இருக்கிறது அது நீதான் என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலை போலீசார்கள் கண்டிப்பாக உங்களுக்கு பாராட்டு விழா நடக்கும் என்ற சத்யாவிடம் கூறியுள்ளார்கள்.
இதன் காரணமாக சிவகாமி சந்தியாவை தனியாக அழைத்து சென்று இந்த நிலையில் உனக்கு பாராட்டு விழா தான் முக்கியமா என சந்தியாவை மிரட்ட சந்தியா உடனே போலீஸ்சார்களை சந்தித்து எனக்கு இந்த பாராட்டு விழா வேண்டாம் என்று கூறி கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வந்து சிவகாமியிடம் கூற சிவகாமி சிரிக்கிறார் மேலும் அர்ச்சனா சந்தியாவை கலாய்க்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.