விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் ஒரே கதையை சவுக்கு போல் இருக்காமல் ஒரு பிரச்சனை என்றால் சில நாட்களிலேயே அதற்கான தீர்வை உடனே தெரிய வைத்து விடுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது அர்ச்சனா ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக போலி சாமியாரிடம் மருந்து வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த சாமியாரை பற்றி செய்தித்தாளில் தகவல் வர இதனை பார்த்த சந்தியா அர்ச்சனாவிடம் நீ இந்த மருந்தை தான சாப்பிடுற என்று கேட்கிறார்.
அதற்கு அர்ச்சனா இதையெல்லாம் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று கேட்க சத்தம் கேட்டா குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் வந்து விடுகிறார்கள். பிறகு சந்தியா குழந்தை பிறப்பது என்பது இயற்கையான ஒன்று மருந்து சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று எந்த முட்டாள் சொன்னது இந்த மருந்து சாப்பிட்டு உனக்கும் உன் குழந்தைக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்ணுவ என்று கேட்கிறார்.
பிறகு போலீசார் வந்து சரவணன் ஏடிஎம்மில் இருந்து காணாமல் போன பணத்தை எடுத்ததை கண்டுபிடித்து விட்டோம் என்று கூறி அர்ச்சனாவின் புகைப்படத்தை காண்பிக்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைய உடனே அர்ச்சனா நான் என்ன செய்வது உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என்று கூற அதற்கு சிவகாமி உன்னை யார் ஆண் குழந்தை கேட்டது பெண் குழந்தை என்றால் வேண்டாம் என்று நாங்கள் கூறினோமா என்று கூறுகிறார்.
பிறகு செந்தில் அர்ச்சனாவை அடிக்கப் போகிறார் உடனே அர்ச்சனா நான் எங்க அம்மா வீட்டுக்கு போய் விடுவேன் குழந்தை பிறந்த பிறகு முகத்தை கூட காட்ட மாட்டேன் என்று கூறி மிரட்டுகிறார். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் பூசாரியை பார்ப்பதற்காக சந்தியா, சிவகாமி ஆகியோர்கள் சொல்கிறார்கள் மேலும் சிவகாமி கொடுத்த தேங்காவை உடைத்து தருகிறார்.
இதனை பார்த்த சந்தியா நீ போலி சாமியார் என்பதை சீக்கிரம் நிரூபிக்கிறேன் என்று மனதை நினைத்துக் கொண்டு தனது தோழியிடம் உதவி கேட்கிறார். மேலும் அடுத்ததாக சந்தியா போலி சாமியாரை பற்றி அனைவருக்கும் தெரிய வைப்பார் என்று தெரிய வருகிறது.
சிக்கிட்டார்.. 🤣
ராஜா ராணி – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani #VijayTelevision pic.twitter.com/rT9TAl2oRZ
— Vijay Television (@vijaytelevision) July 7, 2022