சரவணனின் பணத்தை திருடி வசமாக சிக்கிய அர்ச்சனா.! சிவகாமி எடுத்த அதிரடி முடிவு..

RAJA-RANI-2--TODAY-7
RAJA-RANI-2--TODAY-7

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் சீரியல் தான் ராஜா ராணி 2.

இன்றைய எபிசோடில் சந்தியா நியூஸ் பேப்பரை எடுத்துட்டு போய் இந்த மருந்தை நீ சாப்பிடுறியா எனக்கேற்ப அதற்கு அர்ச்சனா இதையெல்லாம் நீ ஏன் கேக்குற உனக்கு பதில் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று கூற குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சூழ்ந்து கொள்கின்றனர்.

பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இதனை பற்றி சந்தியாவிடம் கூட அனைவரும் அர்ச்சனாவை திட்டுகிறார்கள்.  பிறகு அதே நேரத்தில் ஏடிஎம்மில் இருந்து  10,000 ரூபாய் பணத்தை எடுத்து இருப்பதாக மெசேஜ் வருகிறது.  அதனைப் பார்த்துவிட்டு சரவணன் சந்தியாவிடம் கூற பேங்கில் இருந்தும் ஏடிஎம்மில்லும் பணத்தை எடுத்தவர் ஒரே ஆளாக தான் என்ற போலிசார்கள் கூறுகிறார்கள்.

பிறகு அவர்கள் அந்த புகைப்படத்தினை அனைவரிடமும் காட்ட இந்த புகைப்படத்தில் அர்ச்சனா இருக்கிறார் மேலும் அதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சரிக்கின்றனர். பிறகு சந்தியா கம்பளைண்ட் எதுவும் எடுக்க வேண்டாம் நாங்களே பேசி தீர்த்துக் கொள்கிறோம் என அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு எல்லோரும் இப்படி வீட்டிலேயே பணத்தை திருடியது தப்பில்லையா எனக் கேட்க அதற்கு தப்புதான் ஆனால் எதற்காக செய்தேன் உங்களுக்கு ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தேன் என்று கூறுகிறார். சந்தியா செய்த தப்பு எல்லாதையும் மன்னித்து மாதிரி அதையும் மன்னிச்சுடுங்க.

இவளுக்கு பணத்தை எடுத்து பிரச்சினை இல்லை இந்த வீட்டில் எதையாவது பிரச்சினையை கலக்க வேண்டும் என்றுதான் இப்படி பேசிக்கிட்டு இருக்கா என்று சொல்ல சிவகாமி இந்த பேச்சை இதோட விட்டுடுங்க இனிமே என்கிட்ட சொல்லாம எதையும் செய்யக்கூடாது அர்ச்சனாவை  எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

பிறகு செந்தில் அர்ச்சனாவை தனியாக அழைத்துக் கொண்டு போய் திட்ட இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருந்தீங்கனா நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன் குழந்தையை கண்ணில் காட்ட மாட்டேன் என மிரட்ட செந்திலும் அமைதியாகிவிடுகிறார். இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.