விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. சிவகாமி சந்தியா ஐபிஎஸ்சாக கூடாது என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக வீட்டில் சந்தியா தான் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதை அனைத்தையும் தாண்டி நீ எப்படி ஐபிஎஸ் ஆகி இருக்கிற நானும் பாக்குறேன் என்று சவால் விட்டிருக்கிறார்.
சரவணன் சந்தியா எப்படியாவது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக பயிற்சி நிலையத்திற்கு வீட்டிற்கு உள்ளவர்களுக்கு தெரியாமல் அனுப்பி வைத்திருந்த நிலையில் அதனை எப்படியோ தெரிந்து கொண்ட சிவகாமி சந்தியாவிடம் சண்டை போட்டு சவால் விட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியா அர்ச்சனா சாப்பிடும் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக மருந்து பற்றி தெரிந்து கொண்டார். அந்த போலி சாமியார் பற்றிய நோட்டீஸ் வீட்டிற்கு வர இதனைப் பற்றி தெரிந்து கொண்ட சந்தியா நேராக அர்ச்சனாவின் ரூமிற்கு வந்து சாமியாரிடம் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இந்த மருந்தை வாங்கி சாப்பிடுகிறாயா என்று கேட்கிறார்.
அதற்கு அர்ச்சனா திருட்டு முழி முழிக்கிறார். பிறகு குழந்தை பிறப்பது இயற்கையாக நடக்கக் கூடிய ஒன்று பெண் குழந்தையாக இருந்தால் என ஆண் குழந்தையாக இருந்தால் என்ன இதே போன்று மருந்தை சாப்பிட்டு உனக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்ணுவ ஏன் இதெல்லாம் இந்த காலத்துல நம்பிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.
அர்ச்சனா என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறார். இதுதான் தற்பொழுது வெளிவந்த ப்ரோமோவில் வெளியாகிவுள்ளது. மேலும் சிவகாமியிடம் அர்ச்சனாவும் மாட்டுவார் என்று தெரிய வருகிறது.
இதெல்லாம் நமக்கு தேவைதானா அர்ச்சனா.. 🙄
ராஜா ராணி – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani #VijayTelevision pic.twitter.com/3hj2BXwC4g
— Vijay Television (@vijaytelevision) July 6, 2022