விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியல் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் இடத்தினை பிடித்தது. இந்த சீரியலில் நாயகியான சந்தியா எதிர்பாராத விதமாக தனது தந்தை மற்றும் தாயை இழந்து விடுகிறார்.
இவர்களுடைய கனமான ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சந்தியா முயற்சி செய்து வரும் சரவணன் என்பவர்கள் திருமணம் ஆகி விடுகிறது. அதன் பிறகு பல பிரச்சனைகளை தாண்டி தற்பொழுது சரவணன் மற்றும் சந்தியா இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
சந்தியாவின் கனவினை தெரிந்து கொண்ட சரவணன் எப்படியாவது தனது அம்மாவுக்கு தெரியாமல் சந்தியாவை ஐபிஎஸ் ஆக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் சிவகாமிக்கு தெரியாமல் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சிவகாமிக்கு சந்தியா படித்து வருவது எப்படியோ தெரிந்து விட்டது. இதன் காரணமாக சிவகாமியின் காலில் விழுந்த சந்தியா சரவணன் இருவரும் கெஞ்சி வருகிறார்கள். என்னதான் இவர்கள் கெஞ்சினாலும் சிவகாமி சமாதானம் அடையவில்லை.
அதன் பிறகு தனது அம்மாவை எதிர்த்து சரவணன் சந்தியாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். இருவரும் ஸ்வீட் கடையில் தங்கி வரும் நிலையில் சில கட்டுப்பாட்டுகளுடன் சிவகாமி வீட்டிற்குள் விடுகிறார். அதாவது சந்தியா சிவகாமி இடம் பேசக்கூடாது மேலும் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் சந்தியா தான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
மேலும் சிவகாமி நீ எப்படி ஐபிஎஸ் படிச்சு கிழிக்க போறேன் நானும் பாக்குறேன் இனிமேல் இது வீடு அல்ல போர்க்களம் என அர்ச்சனாவை விட கொடூரவில்லையாக மாறுகிறார். இவ்வாறு இதனை எல்லாம் சமாளித்து எப்படி சந்தியா எப்படி ஐபிஎஸ் ஆகப் போகிறார் என்பதை மையமாக வைத்து தான் இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.