விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2 தொடர்ந்த இந்த சீரியலில் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது டிஆர்பி-யில் இந்த வாரம் இந்த சீரியல் தான் முன்னணி வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த அளவிற்கு பல ட்விஸ்ட்டுகள் இருந்து வருகிறது.
சாமியாரை போலி சாமியார் என ஊரை ஏமாற்றுகிறார் எனவும் சந்தியா மற்றும் சரவணன் அந்த சாமியாரை போலீசில் மாட்டி விட அவர்கள் அர செய்தார்கள். பிறகு சிவகாமி அந்த கேஸ்சை வாபஸ் செய்ய வேண்டும் என சத்தியாவை மிரட்டி வந்த நிலையில் பிறகு எப்படியோ அந்த சாமியார் கேசில் இருந்து வெளியில் வந்து விட்டார்.
பிறகு மீண்டும் தென்காசிக்கு வந்த இவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு சிவகாமி செல்கிறார் அவ்வப்பொழுது அந்த சாமியார் சாமி சிலையை அலங்கரிக்க வேண்டும் என கூறுகிறார். எனவே சந்தியா மற்றும் கண்ணமா இருவரும் இணைந்து சாமி சிலையை அலங்கரிக்கிறார்கள்.
பிறகு அதனை திறக்கும் பொழுது சாமிக்கு அணிந்திருந்த அனைத்து தங்க நகைகளும் காணாமல் போய்விடுகிறது. இதனால் சிவகாமியின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் திருடி விட்டார்கள் என சாமியார் கூறிவிடுகிறர். பிறகு அனைவரும் அவர்களை சண்டை போட்டு பீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சரவணனின் அப்பா மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்ல அங்கு உங்கள் வீட்டிற்கு காய்கறி தர மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.
பிறகு மயில் பால் வாங்க செல்லும் பொழுது இதற்கு மேல் உங்க வீட்டிற்கு பால் கிடையாது எனக் குறிப்பிடுகிறார்கள். செந்தில் தனது டிரஸ் கடையை திறந்து வைக்கும் பொழுது ஊர்க்காரர்கள் ஒருவர் கூட வந்து டிரஸ் வாங்கவில்லை என கூறுகிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது இதற்கெல்லாம் காரணம் சந்தியா தான் என திட்டுகிறார்.
பிறகு சிவகாமி சந்தியா மற்றும் சரவணனிடம் ஒழுங்கா கேசவாபஸ் வாங்குங்க என்று கூற அதற்கு சரவணன் இல்ல அம்மா எங்களால் கேச வாபஸ் வாங்க முடியாது என கூறி விடுகிறார். பிறகு இரவு ஆனதும் அர்ச்சனா தனது வீட்டிற்கு பின்னாடி சென்று திருடிய நகைகளை யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக சாணியில் வைத்து வரட்டியாக செவுத்தில் அடிக்கிறார். பிறகு இப்படி இருந்தால்தான் யாராலும் கண்டுபிடிக்க முடியாது இது காய்ந்தவுடன் தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட வேண்டும் அதனால் தான் யாருக்கும் சந்தேகம் வராது , நீ ரொம்ப அறிவாளியா அர்ச்சனா என தன்னையே புகழ்ந்து கொண்டிருக்கிறார்.