சாமியார் மீது இருக்கும் கேசை வாபஸ் வாங்க வேண்டும் என கூறும் சிவகாமி.! எதிர்க்கும் சந்தியா,சரவணன்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்.

raja-rani-14
raja-rani-14

ராஜா ராணி 2 சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சாமியார் மீது கேஸ் கொடுத்ததால் தற்பொழுது சாமியாரை போலீசார்கள் அரெஸ்ட் செய்துவிட்டார்கள். இதன் காரணமாக தற்பொழுது சிவகாமி சந்தியா மற்றும் சரவணன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

எனவே என் பேச்சைக் கேட்காமல் செய்த இந்த காரியத்திற்காக இந்த ஒரு விளக்கை அணைக்க போகிறேன் என்று கூறிவிட்டு ஒரு விளக்கை அணைக்கிறார். பிறகு அர்ச்சனா இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டா இவளை மாதிரி இருக்கிறவங்கயெல்லாம் திருத்துறது ரொம்ப கஷ்டம் என்று நக்கலாக கூறுகிறார்.

பிறகு சந்தியா தனியாக போய் உட்கார்ந்து வருத்தப்படாத சரவணன் அனைத்து விஷயங்களிலும் நம்பளை பாராட்டணும்னு நினைக்காதீங்க நம்ம நியாயத்தின் பக்கம் நின்னா போதும் என்று கூறுகிறார். அதற்கு சந்தியா நான் நல்லது செஞ்சாலும் என் மீது தான் தப்பு வருகிறது என்று கூறுகிறார்.

பிறகு சிவகாமியிடம் அவருடைய கணவர் கோவிலில் உனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கைநழுவி போயிடுச்சு அதனாலதான் நான் இப்படி பண்ற என்று கேட்கிறார். பிறகு செந்தில் சரவணன் சந்தித்து ஏன்டா இந்த வேலையெல்லாம் ஊரே அந்த சாமியாரை தான் நம்புகிறது அண்ணி ஏதாவது செய்தாலும் கூட நீதானாவரை திருத்த வேண்டும் என்று கூறுகிறார்.

இதனை தொடர்ந்து சிவகாமி சந்தியா மற்றும் சரவணனை வர சொல்லுங்க இப்ப உடனே கோர்ட்டுக்கு போய் அந்த சாமியாரின் மீது இருக்கும் கேசை வாபஸ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் இந்த கேசை வாபஸ் செய்ய முடியாது என மீண்டும் சிவகாமிக்கு எதிராக நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.