ஒரு குடும்பத்தில் பிரச்சினை வரும் ஆனால் குடும்பமே பிரச்சனையாக இருந்தால் என்ன செய்வது.அந்த வகையில் கூட்டு குடும்பம்,அதில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள், ஒரு பிரச்சனை முடிந்ததோடு தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் என வரிசைகட்டி பிரச்சினைகளாக நிற்கும் சீரியல் தான் ராஜா ராணி 2.
இந்த சீரியலில் ராஜா ராணி முதல் சீசனில் நடித்திருந்த ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியல் சித்து இருவரும் நடித்து வந்தார்கள். பிறகு ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார் எனவே தற்பொழுது ரியா என்ற மாடல் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் கனவினை பற்றியது. அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் சின்ன வயதிலேயே இறந்து வரும் பெண் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் வேண்டாம் என்று மறந்து விடுகிறாள். ஆனால் இதனை கண்டுபிடித்த கணவன் எப்படியாவது தனது மனைவின் ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறான்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது ராஜாராணி 2 சீரியலில் சரவணன் தங்கை பார்வதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார்கள். எனவே இவர்களின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என திட்டமிட்டு அர்ச்சனா பல சதித் திட்டங்களை செய்து வருகிறார்.
ஒருபுறம் விக்கி திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு என்னுடன் இருக்கவேண்டும் என பார்வதி மிரட்டி கொண்டிருக்கிறான் இதனை அறிந்து கொண்ட சந்தியா சரவணனிடம் கூறி இதனை எப்படி சமாளிக்கிறான் என்பது தெரியவில்லை. இவ்வாறு தமிழில் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் இந்த சீரியலில் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
அதாவது சூப்பர் ஹிட்டான தியா அவுர் பாத்தி ஹெம் என்ற சீரியலின் வெர்ஷன் தான் ராஜா ராணி 2. இது பலருக்கும் தெரியாது தற்பொழுது அந்த சீரியலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.