அர்ச்சனாசெய்த சதி திட்டத்தை கண்டுபிடித்த ஐபிஎஸ் மூலை.! எதிர்பாராத டுவிஸ்ட்..

rajarani 2
rajarani 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஆலியா மானசா மற்றும் சித்து இவருக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

பிறகு ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது எனவே இந்த சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக சென்னை மாடல் ஒருவர் நடித்து வருகிறார்.  அறிமுகமான காலகட்டத்தில் புதிய நடிகையை ரசிகர்கள் ஏற்றுக்கொல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் அர்ச்சனா தனது தங்கைக்கு பார்வதிக்கு பார்த்தது அந்த பையனை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பல திட்டங்கள் செய்து வருகிறாள்.  எனவே பார்வதி கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவனை  காதலித்தாள்.

அவன் தப்பான எண்ணத்தில் தான் தன்னிடம் பழகுகிறான் என்பதை அறிந்த பார்வதி அவனிடம் இருந்து தப்பித்துக் கொள்கிறாள். பிறகு விக்கி பல முயற்சிகள் செய்தும் பார்வதியை மாற்ற முடியவில்லை தற்பொழுது விரைவில் பார்வதிக்கும் திருமணமாக உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சந்தியா அர்ச்சனா தான் விக்கி மற்றும் பார்வதி இருவரையும் ஒரு வீட்டிற்கு செல்ல வைத்து அடைத்தார் என்பதைக் கண்டுபிடித்து அதனைப்பற்றி அர்ச்சனாவிடம் சந்தியா சொல்ல அர்ச்சனா வாயடைத்துப் போய் விடுகிறாள். எனவே பல டுவிஸ்டுகள் நடந்து வரும் இந்த சீரியல் அடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.