விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முதல் சீசன் வெற்றிபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் தற்போது சரவணன் குடும்பத்தினர் திருமணத்தை சிறப்பாக நடத்தி வருகின்றனர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் வில்லி அர்ச்சனா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று பல திட்டங்களை போட்டு வருகிறாள்.
அந்த வகையில் விக்கியை வைத்துதான் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். போனின் மூலம் தொடர்புக்கொண்டு பார்வதியை மிரட்டி வருகிறான்.எனவே பார்வதி தனது குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார் ஆனால் சந்தியா அட்வைஸ்சால் அந்த முடிவை கைவிட்டு விக்கியை துணிச்சலாக எதிர்கொள்கிறான்.
வீட்டுக்கு போன் செய்து உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று விக்கிடம் பார்வதி சொல்லி விடுகிறாள். இதனால் கோபமடைந்த விக்கி முகூர்த்த நேரத்தில் பாஸ்கர் பார்வதியின் கழுத்தில் தாலி கட்டும் சமயத்தில் திரைப்படம் வில்லன் போல வேற லெவல் என்றி கொடுத்து அனைவர் கவனத்தையும் இருக்கிறான்.
பிறகு மண்டபத்தில் உள்ளவர்களிடம் பார்வதி விக்கியை காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தூக்கி வீசினான். இதனை பார்த்த பிறகு அனைவருக்கும் தவறான எண்ணம் வந்து திருமணம் நின்று விடும் என்று எண்ணுகிறான்.
ஆனால் சந்தியா இந்த விஷயத்தில் தலையிட்டு விக்கியை எப்படியாவது கெட்டவன் என்று நிரூபித்து அவனை மண்டபத்தில் இருந்து விரட்ட போகிறாள். கடைசியில் பாஸ்கர் பார்வதி திருமணம் கண்டிப்பாக நடக்கும் பிறகு இதற்கு வில்லி அர்ச்சனாவும் முக்கிய காரணம் என்பதை அறிந்துக்கொண்டு கண்டிப்பாக விக்கி மற்றும் அர்ச்சனா இருவருக்கும் தகுந்த பாடத்தை புகட்டுவாள் சந்தியா.