விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் டிஆர்பி யில் முன்னிலை வகித்து வரும் நாடகம்தான் ராஜா ராணி. இந்த நாடகம் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஒன்று இந்த நாடகத்தில் சரவணன் தனது மனைவியின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஒத்த காலில் நின்று சந்தியாவிற்கு மிக அதிக உதவிகளை செய்துள்ளார்,
மேலும் சந்தியா ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார் அதற்கு பாராட்டு விழாவும் நடந்தது அந்த விழாவில் சந்தியா சரவணனை புகழ்ந்தார், தற்பொழுது சந்தியா ட்ரைனிங் செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளார்.
ஆனால் இந்த நிலையில்தான் சரவணனின் அம்மா சரவணனிடம் “எனக்கு உன் மனைவி ஒரு நல்ல மருமகளாக இருந்தால் மட்டுமே போதும்”, அவள் எனக்கு ஒரு பேரக் குழந்தையை பெற்றுத் தர வேண்டும் என்கிறார் சரவணனின் அம்மா சிவகாமி. அதனால் சரவணனுக்கும் சந்தியாவிற்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்படுகிறது,
சரவணனும் அம்மாவை எதிர்த்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அம்மாவின் சொல்லை கேட்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறார். அதன்பின் சந்தியாவை ஒரு புது மணப்பெண்ணாக அலங்கரித்து வீட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் பால் சொம்புடன் அனுப்புகிறார்கள்,
அத்தையின் சொல்லை தட்டாத சந்தியா அமைதியாக உள்ளே சென்று பால் சொம்பை கையில் வைத்தபடி சரவணனை ரொமான்டிகாக பார்க்கிறார் அதற்கு சரவணன் இப்படியெல்லாம் பார்க்காதே எனக்கு மூடு மாறிவிடும் என்று கூறி, நீ சென்று புத்தகத்தை எடுத்துப் படி என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார். இவ்வாறு நாடகம் ரசிகர்களை வெகுவாக கவரும்படி ஒளிபரப்பப்படுகிறது.