விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள சீரியல் இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது சீரியல் தான் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக சீரியல்களை உருவாக்கி வருகிறார்கள்.
அதிலும் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அதனை இரண்டாவது, மூன்றாவது சீசன்கள் எடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியைப் பெற்ற சீரியல் தான் ராஜா ராணி.
இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆலியா மானசா உண்மையாலுமே கர்ப்பமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து நீங்க உள்ளார்.
எனவே இவருக்கு பதில் எந்த நடிகை வரப்போகிறார் என்பது தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க சந்தியாவிடம் அர்ச்சனா வசமாக மாட்டிக் கொண்டதால் சந்தியாவை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாக சில சதிகளை மாமியார் சிவகாமியிடம் சந்தியா மீது கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடில் ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சரவணன் சமையல் போட்டிக்கு சென்று வெற்றி பெற்று வந்ததால் பாராட்டு விழா வைப்பதற்கு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து சந்தியாவின் அண்ணன் அமெரிக்காவிலிருந்து கால் செய்து சந்தியாவிடம் உன் அன்னிக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், நாம் வாழ்ந்த பழைய வீட்டை மீண்டும் வாங்கி விட்டேன் என்றும் சந்தியாவிடம் கூற மிகவும் சந்தியா மகிழ்ச்சி அண்ணி பாப்பா இரண்டு பேரும் நல்லா இருக்காங்களா என்று கேட்கிறாள் அவளுடைய அண்ணனும் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
பிறகு காலை கட் பண்ணிவிட்டு சரவணன் வந்தவுடன் சந்தியாவிடம் அவளின் அண்ணன் சொன்ன தகவலைக் கூறி விட்டு சரவணனை கட்டிப்பிடிக்கிறாள் இந்த எபிசோட் தான் இறைக்கு ஒளிபரப்பாக உள்ளது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.