விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் முடிந்த நிலையில் இரண்டாவது முதல் சீசனை விட மிகவும் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சுவாரசியமான பலவற்றையும் பெயர்த்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2.
இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா சஞ்சீவ் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ஆலியா மானசா மற்றும் சித்து இருவரும் நடித்து வந்தார்கள் தற்போது ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் மாடல் அழகி ஒருவர் நடித்து வருகிறார்.
இவ்வாறு மிகவும் விறுவிறுப்பான ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது சந்தியாவின் ஐபிஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சரவணன் தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறான். சிவகாமி வேண்டாம் என்று கூறிய பிறகும் சிவகாமிக்கு தெரியாமல் சந்தியாவை கோச்சிங் ஃளாஸ் அனுப்பி வருகிறார்.
இவ்வாறு சந்தியாவும் வீட்டுக்கு தெரியாமல் படித்து வரும் நிலையில் எப்படியாவது சந்தியாவை வீட்டில் மாட்டி விட வேண்டும் என்பதற்காக அர்ச்சனாவும் பல முயற்சிகளை செய்து வருகிறாள். இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று சந்தியாவை பார்க்க வேண்டும் என்பதற்காக கோச்சிங் கிளாசில் இருந்து சில தோழிகள் வந்துள்ளார்கள். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என அர்ச்சனா நோண்டி நோண்டி கேட்கிறார்.
ஆனால் வேலைக்காரி மயில் இதற்கு முன்பே அவர்களிடம் சந்தியாவின் குடும்பத்தை பற்றி கூறியதால் அந்தக் தோழிகள் நாங்கள் சந்தியாவின் ஸ்கூல் பிரண்ட் எனக்கூறி சமாளிக்கிறார்கள். இதோ வந்த ப்ரோமோ.
தரமான செயல் மயிலு.. 🔥😀
ராஜா ராணி – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani #VijayTelevision pic.twitter.com/9XW0CLozPs
— Vijay Television (@vijaytelevision) April 5, 2022