ஆலியா மானசா, அர்ச்சனாவை தொடர்ந்து மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பொதுவாக முதல் சீசன் வெற்றி பெற்றால் இரண்டாவது சீசன் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதால் சமிப காலங்களாக இரண்டாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள்.இந்த சீசனில் கதாநாயகியாக ஆலியா மானசாக்கு ஜோடியாக சித்து நடித்து வந்தார். மேலும் பல பிரபலங்களும் நடித்து வந்த நிலையில் முதலில் ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார்

தற்பொழுது சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் நடித்து வருகிறார் மேலும் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் வில்லியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை அர்ச்சனா. இவரும் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்.

தற்பொழுது இவர் நடித்து வந்த அர்ச்சனா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடித்து வருகிறார். இவ்வாறு இவரைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் பிரபலம் ஒருவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், அதாவது ஹீரோவாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து தான் இந்த சீரியலில் இருந்து தற்போது விலக இருக்கிறார்.

shreya-and-sithu
shreya-and-sithu

இவர் இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நடித்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இவருக்கு பதிலாக எந்த ஹீரோ அறிமுகமாக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.