ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ரியா விஸ்வநாதன் விலகிய நிலையில் புதிய சந்தியாவை அறிமுகப்படுத்திய விஜய் டிவி.! அட, இவர் ஜீ தமிழ் சீரியல் நடிகையாச்சே..

raja-rani2

டிஆர்பியில் முன்னணி வகித்து வந்த ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தற்போது ஹீரோயின் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக யார் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது மேலும் அவருடைய புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது  அதாவது விஜய் டிவியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ராஜா ராணி 2.

இந்த சீரியலை பாரதி கண்ணம்மா சீரியல் இயக்கிய பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார் எனவே அடிக்கடி இந்த இரண்டு சீரியல்களின் மகா சங்கமமும் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஒரு பெண் தன்னுடைய ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். எனவே இது தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் இருந்து வரும் நிலையில் பிறகு அந்த பெண்ணின் கணவர் தன்னுடைய மனைவியின் கனவை தெரிந்து கொண்டு குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் படிக்க வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தினர்களுக்கு தெரிந்தும் அவர்களை எடுத்து தன்னுடைய மனைவிக்காக போராடுகிறார். இவ்வாறு ஒரு பெண்ணின் கனவையும், திறமையையும் முக்கியமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் முதலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசா தான் நடித்து வந்தார்.

இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளோடு ராஜா ராணி 2 சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் குழந்தை பிறக்கும் சில மாதங்கள் வரையும் பணியாற்றி வந்த இவர் பிறகு இந்த சீரியலை விட்டு விலகினார். பிறகு ரியா விஸ்வநாதன் நடித்து வந்த நிலையில் இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.

asha gowda
asha gowda

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தான் சந்தியா கேரக்டரில் இருந்து விலகுவதாக கூறினார். இவர் என் திடீரென்று ராஜா ராணி 3 சீரியலில் இருந்து விலகினார் என தெரியவில்லை எனவே இதற்கு மேல் யார் சந்தியா கேரக்டரில் நடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியலின் மூலம் பிரபலமான ஆஷா கௌடா தான் சந்தியாவாக நடிக்க இருக்கிறாராம்.