தற்போதெல்லாம் நடிக்கும் திறமை உள்ளவர்கள் சினிமாவில் வளர வேண்டும் என்பதற்காக டிக் டாக் வீடியோ மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமடைந்து இதன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள் சொல்லப்போனால் தற்போது சின்னத்திரையில் இளம் நடிகர் நடிகைகளாக நடித்து வரும் ஏராளமானவர்கள் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒருவர்தான் நடிகை வைஷு சுந்தர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி என்ற ரோலில் நடித்து வருகிறார். இவர் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு சின்னத் திரைக்கு அறிமுகமானார். முதலில் தனது டிக் டாக் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவருக்கு சின்னத்திரை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இவர் இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ள இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரின் மூலம் தான் சீரியலுக்கு அறிமுகமாகியுள்ளார் என்னதான் இருந்தாலும் ராஜா ராணி சீரியல் தான் இவருக்கு சின்னத்திரை நடிகை என்ற அந்தஸ்தை தந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரையில் இவர் நடித்து வந்தாலும் ஒரு புறம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதோடு தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவ்வாறு இவர் நடித்துவரும் ராஜா ராணி சீரியலில் சமீபத்தில்தான் பாஸ்கர்,பார்வதியின் திருமணம் பல பிரச்சனைகளைத் தாண்டி நடந்தது தற்பொழுது பார்வதி என் கல்லூரிக் காதலன் விக்கியின் அப்பா பார்வதியைக் அடைத்து வைத்துள்ளான். இவ்வாறு தீவிரவாதியிடம் பார்வதி வசமாக சிக்கி உள்ளார்.
இவரை காப்பாற்ற வேண்டும் என அனைவரும் பல முயற்சிகளை செய்து வருகின்றார்கள். இவ்வாறு பார்வதி என்ற வைஷுசுந்தர் புதிதாக சொந்தமான கார் ஒன்றை வாங்கிவுள்ளார். விஜய் டிவி நட்சத்திரங்கள் ஏராளமானோர் சமீப காலங்களாக புதிய கார் வாங்கி வரும் நிலையில் அந்த லிஸ்டில் தற்போது இவரும் சேர்ந்துள்ளார். இவர் வாங்கிய உள்ள காரின் விலை ரூபாய் 13 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் கார் வாங்கும் வீடியோவை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எனது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.