“உங்களை கரெக்ட் பண்ணுவதற்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த புதிய சந்தியா.! இவருடைய காதலர் பாக்கியலட்சுமி சீரியல் நடிகரா.!

rajarani-
rajarani-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்தவகையில் முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த நிலையில் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி அமோக வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான்  ராஜா ராணி.

அந்த நாடகத்தில் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா, இந்த நாடகத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் என்றால் அதற்கு முதன்மையான காரணம் ஆலியா மானசா ஆவார், ஏனென்றால் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆலியா மானசா கர்ப்பம் ஆனதால் நாடகத்தில் அவரது கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை தேர்ந்தெடுத்தனர்,அவரது பெயர் ரியா ஆகும்.

ஆரம்பத்தில் ரியா ராஜா ராணி ரசிகர்களால் விரும்ப படவில்லை என்றாலும் தற்போது அவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். மேலும் சில ரசிகர்கள் எங்களுக்கு மீண்டும் ஆலியா மானசா தான் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் ரியாவிடம் இணையதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் “நீங்கள் மிக அழகா இருக்கீங்க உங்களை எப்படி கரெக்ட் பண்ணுவது?” என்று எக்குத்தப்பாக கேள்வி கேட்டுள்ளார்.

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பல நடிகைகள் அமைதியாக இருந்தாலும் ரியா ஓபனாக “நான் கமிட்டெட்” என்று பதில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து என்னது ரியா கமிட்டடா? யார் அந்த பையன் என்று இணையத்தில் அனைவரும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மாடலிங் செய்து கொண்டிருந்த ரியாவிற்கு இந்த நாடகத்தில் பாக்கியலட்சுமி நாடகத்தில் எழில் எனும் வேடத்தில் நடிக்கும் விஷால் என்பவரால்தான் வாய்ப்பு கிடைத்தது என்பது அனைவராலும் தெரிந்து கொள்ளப்பட்டது, மேலும் இவர்கள் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளார்கள் என்பதை வைத்து இவர்தான் ரியாவின் காதலன் என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள் மேலும் நேரடியாக ரியாவிடம் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.