தனுஷின் திரைப்படத்தில் இணைந்த விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

dhanush-vaathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உலகளவில் கலக்கி வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இத்திரைப்படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் மிகவும் அமோகமாக இருந்து வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படம் வெங்கி இயக்க தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. இத்திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள முன்னணி நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ்வுடன் இணைந்து நடிக்கிறார்.

vaathi
vaathi

அந்த வகையில் வாத்து திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் மற்றும் பிரவீனா ஷூட்டிங் என்பது இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.