விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் அனைத்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் மேலும் இந்த சீரியல் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சமீப காலங்களாக சந்தியா மற்றும் சரவணனுக்கு இடையே அதிகமாக ரொமான்ஸ் காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.
இந்த சீரியலில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும் இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்த சித்து நடித்து வருகிறார்.
ஆலியா மானசா விலகியதால் சந்தியா கேரக்டரில் ரியா என்ற மாடலை அறிமுக படுத்தினார்கள். சமீப காலங்களாக இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் மற்றும் மாற்றங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சரவணன் மற்றும் சந்தியாவிற்கு இடையே அதிகமாக ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சித்து மற்றும் ஸ்ரேயா சமீபத்தில்தான் திருமணமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஸ்ரேயா-சித்து இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்து வந்தார்கள் அதன் மூலம் இவர்களுடைய காதல் ஏற்பட்டு இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ராஜா ராணி சீரியலில் சித்து மற்றும் ரியாவிற்கு இடையே அதிக ரொமான்ஸ் இருந்து வருவதால் ஸ்ரேயா ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன்னுக்கு போன் செய்து ஆலியா மானசா இருந்த வரை சரியாகத்தான் இருந்தது. ஆனால் ரியா அறிமுகமான பிறகு அதிகமாக ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்று வருகிறது எனவே வரும் காலத்தில் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.