ஆலியா மானசா இல்லாத குறையை பூர்த்தி செய்யும் அர்ச்சனா.!

Raja Rani 2
Raja Rani 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் சீசன் முடிவு எடுத்ததால் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் ராஜா ராணி.

இந்த சீரியலின் முதல் சீசனில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவருக்கு ஜோடியாக நடித்து வந்தார்கள்.மேலும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் அதன் பிறகு ஆலியா மானசா கர்ப்பமானதால் அவரால் சீரியலில் நடிக்க முடியவில்லை.

பிறகு அவர் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு மாறியதால் ராஜா ராணி சீசன் 2  நடித்து வந்தார்.இந்த சீசனில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார் பிறகு இவர்களுடைய கெமிஸ்ட்ரி, லவ் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் டிஆர்பி-யில் முன்னணியும் வைத்தது.

Raja Rani 2
Raja Rani 2

இப்படிப்பட்ட நேரத்தில் அலியா மனசா மீண்டும் கர்ப்பமான நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகினார் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசா நடித்து வந்த சந்தியாக கேரக்டரில் ரியா நடித்து வருகிறார். மேலும் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Raja Rani 2
Raja Rani 2

அதாவது இந்த சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 500 வது எபிசோடை கொண்டாடும் வகையில் தற்பொழுது நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் ரியா மற்றும் அர்ச்சனா இருவரும் இணைந்து தங்களுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளார்கள் இதன் காரணமாக ஆலியா மானசா இல்லாத குறை இவர்கள் தீர்த்துள்ளார்கள் என கூறப்படுகிறது.