விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் பொதுவாக ஒரு சீரியல் வெற்றியை பெற்று விட்டால் அதனை இரண்டாவது மூன்றாவது சீசன்கள் என தொடர்ந்து ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்ற சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இவர்களின் ஜோடி சிறப்பாக அமைந்ததால் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
பிறகு முதல் சீசன் முடிந்த நிலையில் இரண்டாவது சீசன் உருவாக்கலாம் என்று முடிவு செய்த பொழுது ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் சீரியல் படப்பிடிப்பு நடைபெறுவதை தள்ளி போட்டு இருந்தார்கள். இருக்கும் கொஞ்ச நாட்களில் மற்ற சீரியலில் நடிக்கலாம் என சில சீரியல்களில் நடித்து வந்தார்.
எனவே ஆலியா மானசா ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது சஞ்சீவ் மற்ற சீரியல்களில் நடித்து வந்ததால் அவரால் இந்த சீரியலில் நடிக்க முடியவில்லை இதன் காரணமாக கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் படித்துவந்த சித்து சந்தியாவிற்கு ஜோடியாக நடிக்க வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆலியா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சமீபத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது இதன் காரணமாக இவர் சில மாதங்கள் இந்த சீரியலில் இருந்து விலகினார்.எனவே சென்னை மாடலிங் ஒருவர் தற்போது சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது சிவகாமி சந்தியாவிடம் செயினை கழற்றி தா என கூற உடனே சந்தியா செயினை கழற்றி தருகிறாள் அர்ச்சனாவிடம் வளையலை தா என கேட்டதற்கு ஏன் எதற்கு என கேள்வி கேட்டதால் இதுதான் நீ என அர்ச்சனாவை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்குகிறார் அந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Note பண்ணுங்க பா.. Note பண்ணுங்க பா.. 😜
ராஜா ராணி – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani #VijayTelevision pic.twitter.com/0zOy9tGURN
— Vijay Television (@vijaytelevision) April 4, 2022