விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள். சாமியாரின் சூழ்ச்சியினால் சிவகாமியின் குடும்பத்தில் இருப்பவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில் அனைத்தும் சரியானது ஆனால் புதிதாக ஒரு பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
அதாவது தீச்சட்டி ஏந்தி சென்ற பொழுது சத்யாவை அடித்து விட்டு கண்ணம்மா மற்றும் பார்வதியை ரவுடிகள் சென்றார்கள் பிறகு அனைவரும் பார்வதி இறந்துவிட்டதாக நினைத்து வந்த நிலையில் இப்பொழுது அவர் உயிருடன் காப்பாற்ற பட்டு இருப்பது குடும்பத்தினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
அதாவது கண்ணம்மா ரவுடிகளிடமிருந்து மீட்கப்பட்ட நிலையில் அடுத்ததாக அனைவரும் சேர்ந்து சாமியாரை பார்ப்பதற்காக சென்றார்கள் அவ்வப்பொழுது போலி சாமியார் என நிரூபித்த நிலையில் ஊர் பொதுமக்கள் அனைவரும் சாமியாருக்கு எதிராக மாறி உள்ளார்கள். மேலும் சாமியின் கண்ணில் இருந்து எப்படி ரத்தக்கண்ணீர் வந்தது மற்றும் கிணற்றில் எப்படி மாடு விழுந்தது என அனைத்து உண்மைகளையும் சத்யா கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செல்வம் பார்வதியை அழைத்து வந்து துப்பாக்கியை வைத்து மிரட்டி கொண்டிருந்த நேரத்தில் அர்ச்சனா பின்புறமாக செல்வத்தின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி பார்வதியை காப்பாற்றினார். இதன் காரணமாக பார்வதி கிடைத்தது மற்றும் போலி சாமியார் என சந்தியா நிரூபித்ததால் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார்கள்.
வீட்டிற்கு சென்றவுடன் சிவகாமி தற்பொழுது இந்த ஊர் நல்லா இருக்குது என்றால் அது உங்களால்தான் எனக்கூறி சந்தியா மற்றும் சரவணனிடம் மன்னிப்பு கேட்கிறார். சந்தியா அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை என்ன பேசிக் கொண்டிருக்கிறார்.இந்த நேரத்தில் சிவகாமி மயங்கி விழ அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.
அங்கு பாரதி சிவகாமிக்கு சிகிச்சை பார்க்கிறார் அப்பொழுது அவருக்கு மைல்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக கூற இங்கு சரி செய்வதற்கான பெசிலிட்டிஸ் இல்லை எனக் கூறிவிட்டு சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கூறுகிறார். பிறகு சந்தியா இவ்வளவு தூரம் போவதால் அவருக்கு எதுவும் பிரச்சனையை ஏற்படாது என கேட்டு தெரிந்து கொள்கிறார் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.