ஹீரோவாக களமிறங்கும் குக் வித் கோமாளி புகழ்.! அதுவும் இந்த அட்டு ஃபிகரு தான் ஜோடியா.!

pugazh
pugazh

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இவர்கள் பல சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள். அந்த வகையில் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. அதில் ரசிகர்களால் மிகவும் ரசித்து பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாலி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் விரும்பி பார்ப்பார்கள் ரசிகர்கள் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். முதல் இரண்டு சீசன் முடிவடைந்த  நிலையில் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடியால்  ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். குக் வித் கோமாளி புகழ் ஹீரோவாக நடிக்கப் போகும் திரைப்படத்திற்கு மிஸ்டர் ஜு கீப்பர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 20ஆம் தேதி ஊட்டியில் நடைபெற இருப்பதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் புகழ் புலியுடன் நடிக்க இருப்பதாகவும் அதற்காக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, டிக்கிலோனா ஆகிய திரைப்படத்தில் நடித்த ஷெரின் காஞ்சுவாளா தான் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும்.

தன்வீர் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் மாதவன் நடித்த என்னவளே திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sherin
sherin