கின்னஸ் சாதனை படைத்த விஜய் டிவி புகழின் மகள்.. 1 வயதில் ஆச்சரியப்படுத்திய ரித்தன்யா

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் புகழ். அதன் பிறகு குக் வித் கோமாளி அவருக்கு மிகப்பெரும் அடையாளமாக அமைந்தது. அதுவே சினிமா வாய்ப்புகளுக்கும் காரணம்.

விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் புகழ் தற்போது சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் சபாபதி வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெருமையும் கௌரவமும் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது. பென்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் புகழுக்கு ரித்தன்யா என்ற மகள் இருக்கிறார்.

சமீபத்தில் தான் இவர் தன்னுடைய முதல் பிறந்த நாளை கொண்டாடினார். அதை ஒட்டி அவருடைய போட்டோவும் இணையத்தை அலங்கரித்தது. தற்போது அவர் ஒரு சாதனையாளராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ஆம் புகழின் ஒரு வயதே ஆன மகள் ரித்தன்யா தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இரண்டு கிலோ எடை கொண்ட டம்பிள்ஸை 17 வினாடிகள் பிடித்திருந்து சர்வதேச சாதனை படைத்திருக்கிறார் அழகு குட்டி ரித்தன்யா.

11 மாதங்கள் 16 நாட்களே ஆன இவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இந்த சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version