விஜய் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து தொகுப்பாளினியாக பங்கு பெற்று தற்போது வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் முதன் முறையில் சுட்டி டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினார்.
பிறகு ஓரளவிற்கு சின்னத்திரையில் பிரபலடையந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றார்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிறகு ஏராளமான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதோடு மட்டுமல்லாமல் போட்டி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். பிறகு இவர் மாகாபா-வுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொழுது சின்ன குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தார்.
இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிறகு சில காலங்களாக பணியாற்றாமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் தான் மீண்டும் பணியாற்ற தொடங்கிவுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தொகுப்பாளியாக ஒரு எபிசோடிற்க்கு பணியாற்றுவதற்கு ரூபாய் 2 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று சரியாக தெரியவில்லை.