நடிகையாக களமிறங்கிய தொகுப்பாளினி பிரியங்கா.! இவருக்கு ஜோடி யார் தெரியுமா.?

priyangavj

சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்ற ஆரம்பித்து பிறகு பிரபலமான தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்து இறுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் பிரியங்கா.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் டிடி-க்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஜய் டிவியின் ஒரு அங்கமாக திகழ்கிறார் பிரியங்கா. இவ்வார பிரபலமடைந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த  பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு மவுசு இருந்ததால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபா-வுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இவ்வாறு வளர்ந்து வரும் இவர் சோஷியல்  மீடியாவிலும் தனது புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில்  இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக மாறி  ஹீரோயின் ரேஞ்சுக்கு இருந்ததால் ரசிகர்கள் பலரும் பிரியங்கா வா இது என்று ஆச்சரியப்பட்டு வந்தார்கள்.

இவ்வாறு ஆச்சரியப்பட்டு வந்த ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில் தற்பொழுது நடிப்பிலும் களமிறங்கி உள்ளார். ஆம், அதாவது விஜய் டிவியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பணியாற்றி வரும் மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பரம் படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

priyanga vj 1
priyanga vj 1